fbpx

வாங்கம்மா வாங்க!… ஒரு கிலோ வெங்காயம் வெறும் 60 பைசா தான்…. எங்கன்னு தெரியுமா?

கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை கடும் சரிவை சந்தித்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் ஒரு கிலோ வெங்காயம் ரூ 10 முதல் 16 ரூபாய் வரையில் கிடைக்கிறது.

இந்தியாவில் சில நாட்களாக வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், மற்ற நேரங்களில் வெங்காயத்தின் விலை மிகவும் குறைவாகவே இருக்கும். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக வெங்காயத்தின் விலை கடும் சரிவை சந்தித்து வருகிறது. மத்தியப் பிரதேசத்தின் ரத்லம், இந்தூர் மற்றும் மந்த்சூர் மாவட்டங்கள் வெங்காய சாகுபடிக்கு பெயர் பெற்றவை. நான்கு மாதங்களுக்கு முன், நவம்பர் – டிசம்பரில், வெங்காயத்தின் விலை, சந்தைகளில், கிலோ, 200 ரூபாயை எட்டியது. ஆனால் தற்போது, மந்த்சூர் மாவட்டத்தில் வெங்காயத்தின் விலை ஒரு கிலோ ரூ.50 பைசா முதல் 80 பைசா வை கிடைக்கிறது. மண்டிகள் மூடப்பட்டதால், கொள்முதல் இன்னும் சரியாக தொடங்கவில்லை, அது தொடங்கிய இடங்களில், விவசாயிகளுக்கு கணிசமாக குறைந்த விலை கிடைக்கிறது. இதேபோல், தமிழ்நாட்டில் ஒரு கிலோ வெங்காயம் ரூ 10 முதல் 16 ரூபாய் வரையில் கிடைக்கிறது. இது நுகர்வோருக்கு மகிழ்ச்சி தரும் விஷயமாக இருந்தாலும் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.

Kokila

Next Post

செப்டம்பர் 30-ம் தேதிக்கு பிறகு ரூ.2000 நோட்டுகளுக்கு என்ன நடக்கும்?... ரிசர்வ் வங்கியின் முக்கிய தகவல்!

Sun May 21 , 2023
செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பிறகு 2000 ரூபாய் நோட்டுகள் செல்லுமா? செல்லாதா? என்பதுதான். இந்த கேள்விக்கு ஆர்பிஐ தற்பொழுது விளக்கம் அளித்துள்ளது. ரிசர்வ் வங்கியானது 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வருகிற 23 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை வங்கிகளில் கொடுத்து மாற்றிகொள்ளலாம் எனவும் வாடிக்கையாளர் ஒருமுறை 20,000 […]

You May Like