ருதுராஜ்-கான்வே ருத்ர தாண்டவம்!… டெல்லியை வீழ்த்தி மாஸாக பிளே ஆஃப்-க்குள் நுழைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12வது முறையாக பிளே ஆஃப்-க்குள் நுழைந்தது.


ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி, தற்போது அதன் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. புள்ளிப்பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய தீவிரம் காட்டி வருகின்றன. ஏற்கெனவே குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 67வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் களமிறங்கிய சென்னை அணி வீரர்கள் சிக்ஸர்கள், பவுண்டரிகள் என பறக்க விட்டனர். முடிவில், சென்னை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக கான்வே 87 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 79 ரன்களும், சிவம் துபே 22 ரன்களும் குவித்தனர்.

இதையடுத்து 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசி வரை போராடிய டெல்லி அணி கேப்டன் டேவிட் வார்னர் 86 ரன்கள் அடித்தார். சென்னை அணி தரப்பில் தீபக் சஹர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.இதன்மூலம் 77 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் 12வது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்குள் சென்னை அணி தகுதி பெற்று அசத்தியுள்ளது.

KOKILA

Next Post

கடைசி நிமிடம் வரை திக் திக்... போராடி தோற்ற KKR!... 1 ரன் வித்தியாசத்தில் லக்னோ த்ரில் வெற்றி!... பிளே ஆஃப்-க்குள் என்ட்ரி!

Sun May 21 , 2023
ஐபிஎல் தொடரின் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று லக்னோ அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது 16-வது ஐபிஎல் தொடரில் நேற்றி இரண்டு போட்டிகள் நடைபெற்ற நிலையில், இரவு 7.30 மணிக்கு தொடங்கிய 68வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா […]
LSG Won

You May Like