fbpx

ஷாக்கிங்..!! கேஸ் விலை ரூ.1800, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.170..!! அத்தியாசியப் பொருட்களின் விலை அதிரடி உயர்வு..!!

மணிப்பூரில் கலவரத்தை தொடர்ந்து அத்தியாவசியப் பொருட்களில் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.170-க்கும், கள்ளச்சந்தையில் ஒரு சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.1,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மணிப்பூரில், பெரும்பான்மையாக இருக்கும் ‘மெய்தி’ இன மக்கள், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்குமாறு கேட்பதற்கு பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்தினர். இது இருதரப்பினரிடையே கலவரமாக வெடித்தது. இதில், 70 பேர் பலியானார்கள். 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட ராணுவம் மற்றும் துணை ராணுவப்படையினர், போலீசார் குவிக்கப்பட்டனர். இதற்கிடையே, கலவரத்தை தொடர்ந்து கடந்த 3 வாரங்களாக அத்தியாவசியப் பொருட்களில் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது.

சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டதாலும், தாக்குதல் நடக்குமோ என்ற லாரி அதிபர்களின் அச்சத்தாலும் வெளிமாநிலங்களில் இருந்து அத்தியாவசியப் பொருட்கள் வருகை தடைபட்டது. இதனால், கைவசம் இருந்த பொருட்களின் இருப்பு குறைந்தது. அதனால், அப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அரசு நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.110 முதல் ரூ.115 வரை மற்ற மாநிலங்களில் விற்கப்பட்டு வருகிறது. ஆனால், மணிப்பூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.170-க்கு விற்கப்படுகிறது. ஒரு சமையல் கியாஸ் சிலிண்டர் கள்ளச்சந்தையில் ரூ.1,800-க்கு விற்கப்படுகிறது.

அரிசி மூட்டை விலை ரூ.900-ல் இருந்து ரூ.1,800 ஆக உயர்ந்து விட்டது. உருளைக்கிழங்கு, வெங்காயம் ஆகியவற்றின் விலையும் உயர்ந்து விட்டது. 30 முட்டைகள் கொண்ட பெட்டி ரூ.180இல் இருந்து ரூ.300 ஆக அதிகரித்து விட்டது. உருளைக்கிழங்கு விலை கிலோ ரூ.100 ஆக உயர்ந்துள்ளது. இப்பொருட்களை ஏற்றி வரும் லாரிகளுக்கு பாதுகாப்புப் படையினர் காவலாக சென்று வருகின்றனர். இல்லாவிட்டால், இப்பொருட்களின் விலை இன்னும் அதிகமாக இருந்திருக்கும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். கலவரத்தால் பாதிக்கப்படாத மாவட்டங்களிலும் விலைவாசி உயர்ந்துள்ளது. உள்ளூரிலேயே ஆடு, கோழிகள் கிடைப்பதால், இறைச்சி விலை மட்டும் உயரவில்லை.

Chella

Next Post

பிளஸ்2 முடித்த மாணவர்களுக்கு..!! இன்று வெளியாகும் அரசின் மிக முக்கிய அறிவிப்பு..!! ரெடியா இருங்க..!!

Thu May 25 , 2023
தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர 3 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். மாணவர் சேர்க்கை தொடர்பாக கல்லூரி வாரியாக தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. தயாரிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியல் இன்று கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும் என […]

You May Like