fbpx

தொடர் மது விற்பனை திருப்பத்தூர் அருகே…..! இளைஞர் குண்டர் சட்டத்தில் அதிரடி கைது….!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பால்நாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த இளவரசன்( 31) என்பவர் கர்நாடக மாநில மதுபான பாட்டில்களை அதிகளவில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து 745 லிட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்திருக்கின்றனர்.

வெளி மாநில மதுபான பாட்டில்களை அவர் தொடர்ந்து விற்பனை செய்து வருவதால் அவர்மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரை செய்ததை ஏற்றுக்கொண்ட திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் வழங்கிய உத்தரவின் அடிப்படையில், ஜோலார்பேட்டை காவல் துறையினர் இளவரசன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்துள்ளனர்.

Next Post

மருமகளை நிர்வாணப்படுத்தி பிறப்புறுப்பில் சூடுவைத்து சித்ரவதை செய்த மாமியார்..!! ஏன் தெரியுமா..?

Thu May 25 , 2023
மத்தியப்பிரதேச தலைநகர் போபாலில் விதிஷா என்ற பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணுக்கு, சுகி செவானியா கிராமத்தில் வசிக்கும் இளைஞருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. பெண்ணின் கணவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். திருமணமாகி சில மாதங்களிலேயே வரதட்சணை கேட்டு கணவர் சித்ரவதை செய்துள்ளார். தினமும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. பலமுறை பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சேர்ந்து சமாதானம் செய்துவைத்தும் சண்டை தீரவில்லை. தினமும் சண்டை சச்சரவுகளால் […]

You May Like