fbpx

விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்..!! ஆழ்துளை கிணறு அமைக்க 100% மானியம்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

தமிழக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசானது அவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்காக தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதாவது கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலமாக எஸ்சி மற்றும் எஸ்டி விவசாயிகளுக்கு 100% மானியத்தோடு ஆள்துறை கிணறு அமைப்பதற்கான நீர் பாசன வசதி அமைத்துக் கொடுக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் தற்போது விவசாயிகளுக்கு ஆள்துணை கிணறு அமைக்கும் திட்டத்திற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஆழ்துளை கிணறு வசதியை மின்னோட்டார் உதவியுடன் அமைத்துக் கொடுப்பதற்கு எஸ்சி மற்றும் எஸ்டி விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறு மற்றும் குறு விவசாயிகள் எஸ்சி, எஸ்டி விவசாயிகள் வருவாய் துறையின் மூலமாக வழங்கப்பட்ட சாதி சான்றிதழ் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இந்த வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற விவசாயிகள் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

பல கோடி நஷ்டம்..!! அரசுப் போக்குவரத்துக் கழகம் தனியார் மயமாக்கப்படுகிறதா..? அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்..!!

Sun May 28 , 2023
சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டபடி,ச் பெண்களுக்கான இலவச பேருந்து திட்டமானது தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பெண்கள் இந்த பேருந்து வசதியை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கிடையே, தமிழ்நாட்டில் எரி பொருட்களின் விலை அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருவதால், இலவச பேருந்து திட்டத்தினால் ஒரு நாளைக்கு மட்டுமே தமிழ்நாடு அரசுக்கு பல கோடி நஷ்டம் ஏற்படப்படுகிறது. இதனால் மகளிருக்கான இலவச பேருந்துகளுடைய எண்ணிக்கை குறைக்கப்படுமா? எனவும், இந்த திட்டமானது கைவிடப்படுமா? எனவும் […]

You May Like