என்னதான் சமையலறை மற்றும் பாத்ரூமை பளிச்சென மற்ற முயற்சித்தாலும், அது நடப்பதில்லை. கிச்சன் டயில்ஸை கூட நாம் ஓரளவுக்கு பளிச்சென்று மாற்றிவிடலாம். ஆனால், இந்த பாத்ரூம் டைல்ஸை அப்படி மாற்றுவது மிகவும் கடினம். ஏனென்றால், தண்ணீரில் உள்ள உப்பு கரை டயில்ஸில் படிந்து அழுக்காக தெரியும். இதை நீக்க அதிகமாக பணம் செலவு செய்து சந்தைகளில் விற்கப்படும் சில பொருட்களை வாங்கி உபயோகிப்போம்.
ஆனால், இதனால் எந்த பயனும் நமக்கு கிடைக்காது. வெறும் 10 ரூபாய் செலவில் உங்கள் முழு பாத்ரூமையும் பளிச்சென்றும், நறுமணத்துடவும் வைக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?. ஆமாம்.. உண்மைதான். பாத்ரூமில் படிந்துள்ள உப்புக்கரைகளை எளிமையாக நீக்குவதற்கான சில உதவிக் குறிப்புகளை நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம். அதோடு, மீண்டும் டைல்ஸில் உப்பு கறை படியாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பாத்ரூம் டைல்ஸை பளிச்சென்று மாற்ற வேண்டுமா..?
* டைல்ஸில் படிந்திருக்கும் உப்பு கறையை போக்க, முதலில் ஒரு கிண்ணத்தில் சிறிதளவு கல் உப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் அளவு வீட்டில் படிந்துள்ள கறைகளின் அளவை பொறுத்து மாறுபடும். பின்னர் அதில் ஒரு எலுமிச்சை பழ சாற்றை பிழிந்து, அதில் துணி துவைக்க பயன்படுத்தும் சோப்புத் தூளை ஒரு ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் அரை ஸ்பூன் சோடா உப்பை சேர்க்கவும்.
* இதையடுத்து இந்த கலவையில், வினிகர் 3 ஸ்பூன் சேர்க்கவும். வினிகர் இல்லை என்றால் கவலை வேண்டாம் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இது பேஸ்ட் பதத்திற்கு வரும் வரை நன்றாக கலக்கவும். இப்போது இந்த பேஸ்ட்டை உப்புக்கறை படிந்திருக்கும் டைல்ஸில் பிரெஷ் வைத்து கொஞ்சமாக எடுத்து தேய்க்கவும்.
* கரை படிந்த டைல்ஸில் தேய்த்த பிறகு, 10 நிமிடம் அப்படியே வைத்துவிடுங்கள். இதையடுத்து, பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் இரும்பு நாரை கொண்டு லேசாக தேய்த்தாலே போதும், எத்தனை வருட கரையாக இருந்தாலும் உடனடியாக நீங்கி விடும்.
* பாத்ரூம் கறை நீங்கிய பின்னர் நன்றாக தண்ணீர் ஊற்றி கழுவவும். டைல்ஸ் நன்றாக காய்ந்த பிறகு ஒரு காட்டன் துணியில் கொஞ்சமாக தேங்காய் எண்ணெய் ஊற்றி, அதை டைல்ஸில் தண்ணீர் படும் இடங்களில் நன்றாக தடவி விட்டால் உப்பு தண்ணீர் கறை மீண்டும் டைல்ஸில் படியாது. இதை, வாரத்திற்கு ஒரு முறை தொடர்ந்து செய்ய வேண்டும்.