தன்னைவிட 12 வயது குறைவானவரை திருமணம் செய்து கொண்டது ஏன்..? பிரபல நடிகையால் பரபரப்பு..!!

மலைக்கா அரோரா தனது காதலன் அர்ஜுன் கபூரின் ‘அரை நிர்வாண’ புகைப்படத்தை சமீபத்தில் இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டு மீடியா கவனத்தை ஈர்த்துள்ளார்.


இந்த ஜோடி சமூக ஊடகங்களில் தங்கள் “தனிப்பட்ட தருணங்களை” பகிர்ந்து பலமுறை விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது. மலைக்கா மற்றும் அர்ஜுன் இடையே 12 வயது இடைவெளி காரணமாக அடிக்கடி ட்ரோல்களில் சிக்கிக்கொள்கின்றனர். அர்ஜுனுக்கு தற்போது வயது 37, மலைக்காவுக்கு வயது 49. மலைக்கா யார் என யோசிப்பவர்களுக்கு, உயிரே படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து ‘தைய தைய’ பாடலுக்கு நடனமாடுவாரே அவர் தான்.

இதற்கிடையே, நிகழ்ச்சி ஒன்றில் இளையவரை திருமணம் செய்வது குறித்து மலைக்காவிடம் கேட்கப்பட்ட பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் தனது முன்னாள் கணவர் அர்பாஸ் கானுடன் கலந்துக் கொண்டார். அப்போது, “இளையவரை திருமணம் செய்து கொண்டது எப்படி இருக்கிறது?” என்ற கேள்விக்கு, “நன்றாக இருக்கிறது” என பதிலளித்தார் மலைக்கா. சல்மான் கானின் இளைய சகோதரரான அர்பாஸுக்கு தற்போது 55 வயது. இந்நிலையில் மலைக்காவுக்கு 49 வயதுக்கும் மேல் இருக்குமோ என ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.

ஏறக்குறைய 19 வருட திருமணத்திற்குப் பிறகு 2017ஆம் ஆண்டு மலைக்கா அரோராவும் அர்பாஸ் கானும் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றனர். இவர்களுக்கு அர்ஹான் என்ற 16 வயது மகன் உள்ளார். இதையடுத்து மலைக்கா அரோரா அர்ஜுன் கபூருடன் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ரிலேஷன்ஷிப்பில் உள்ளார். 2019ஆம் ஆண்டு அர்ஜுனின் பிறந்தநாளில் இருவரும் தங்கள் உறவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

CHELLA

Next Post

ஏற்பாடு செய்திருந்த திருமணத்தை நிறுத்திவிட்டு…..! காதலனுடன் ஓட்டம் பிடிக்க முடிவு செய்த மணப்பெண் இறுதியில் நேர்ந்த சோகம்…..!

Wed May 31 , 2023
உத்தரப்பிரதேச மாநிலம் மிர்ஷாப்பூர் மாவட்டத்தில் இளம் பெண் ஒருவருக்கு திருமணம் செய்வதற்கு அவருடைய பெற்றோர்கள் முடிவு செய்தனர். அதன்படி திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது திருமணத்திற்கு ஒரு நாள் முன்னர் அந்த இளம் பெண் தன்னுடைய காதலனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார். அதற்கான திட்டத்தை வகுத்து அதன்படி செயல்பட்ட அந்த பெண்மணி, அந்த பெண்ணின் காதலனுடன் அந்த பெண்ணின் உறவினர் ஒருவருடன் அந்தப் பெண்ணின் […]
marriege

You May Like