திருப்பூர் அருகே தனியார் பஞ்சாலையில் உண்டான பயங்கர தீ விபத்தில் 70 லட்சம் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள், இயந்திரங்கள் உள்ளிட்டவை எரிந்து சாம்பலானது. திருப்பூர் மாவட்டம் பூமனூரில் செயல்பட்டு வரும் பஞ்சாலை ஒன்றில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த ஆலையில் நேற்று பஞ்சு மூட்டைகள் வைக்கப்பட்டிருந்த குடோனில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்து தொடர்பாக, தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் வெகுநேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் 70 லட்சம் ரூபாய் மதிப்பிற்கான பஞ்சு மூட்டைகள், இயந்திரங்கள் உள்ளிட்டவை தீயில் கருகி நாசமானது. இந்த தீ விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.