fbpx

மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பம்…! முதல்வர் ஏக்நாத் ஷிண்டே – சரத் பவார் திடீர் சந்திப்பு…!

மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை, அவரது இல்லத்தில் வைத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் சந்தித்தார்.

மகாராஷ்டிராவின் மூத்த அரசியல்வாதியும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத் பவார், அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்தக் சந்திப்பின் நோக்கம் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. அண்மைக்கால அரசியல் பின்னணி அதிகார அரசியலைப் பொறுத்த வரையில் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.

மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்ற பிறகு இரு தலைவர்களும் சந்திக்கும் முதல் சந்திப்பு இதுவாகும். மகாவிகாஸ் அகாதியின் முக்கிய பிரமுகரான முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே வெளிநாட்டில் இருப்பதால் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தாக்கரே குடும்பத்துடன் வெளிநாடு சென்றுள்ளார், ஜூன் முதல் வாரத்திற்கு பிறகு மும்பை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Vignesh

Next Post

WTC Final!... இந்திய அணியின் தேர்வுக்குழுவை கடுமையாக விமர்சித்த ரிக்கி பாண்டிங்!... ஏன் தெரியுமா?

Fri Jun 2 , 2023
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா மிகப்பெரிய தவறை செய்துள்ளது என்று ரிக்கி பாண்டிங் விமர்சித்துள்ளார். ஐபிஎல் போட்டிகள் நிறைவு பெற்று தற்போது அனைவரின் கவனமும் உலக டெஸ்ட் இறுதிப்போட்டியை நோக்கி திரும்பியுள்ளது. உலகமே தற்போது மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) 2023 இறுதிப்போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ளது. உலக டெஸ்ட் இறுதிப்போட்டிக்கான சாம்பியன் யார் என்ற தேடலில், ஜூன் […]

You May Like