fbpx

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000..!! இது உண்மையா..? அரசு வெளியிட்ட புதிய தகவல்..!!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின்போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ரூ.1,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. திமுக அரசு அறிவித்துள்ள தேர்தல் அறிவிப்பு அறிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில், இந்த தொகையானது வரும், ஜூன் மாதம் 3ஆம் தேதி கருணாநிதி பிறந்தநாளில், ரூ.1,000 உரிமை தொகை வழங்கும் திட்டம் தொங்கும் என தகவல்கள் வெளியான நிலையில் இந்த திட்டத்தை, கூட்டுறவு வங்கி சார்பில் ரேஷன் கடைகளில் பட்டுவாடா செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டம் செப்டம்பர் மாதம் முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான பயனாளிகள் தேர்வு முழுவீச்சில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து மகளிர் உரிமைத் தொகையை, மாநில தலைமை மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில், ரேஷன் கடைகளில் மைக்ரோ ஏ.டி.எம். கருவி மூலம் பட்டுவாடா செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

Chella

Next Post

தமிழ்நாடு முழுவதும்..!! பள்ளிகள் திறக்கும் முன் இதை செய்திருக்க வேண்டும்..!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!!

Fri Jun 2 , 2023
தமிழ்நாட்டில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை விடப்பட்டது. மாணவர்களும் மகிழ்ச்சியாக கோடை விடுமுறையை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து வரும் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், தகுந்த சுகாதார மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்க அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 6-18 வயதுடைய […]

You May Like