தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கண்டமனூர் அடுத்துள்ள பொன்னம்மாள் பட்டியை சேர்ந்தவர் பெருமாள் இவரது மனைவி சமுத்திரக்கனி (48) இவர்களுக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் இருக்கின்றனர். பெருமாள் கடந்த 14 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்து விட்ட நிலையில் இவர்களது மகனும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஒரு சாலை விபத்தில் உயிரிழந்து விட்டார்.
சமுத்திரகனி தன்னுடைய முதல் மகளை பொன்னம்மாள் பட்டியிலும், 2வது மகளை காந்திபுரம் பகுதியில் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார். திருமணத்திற்கு பிறகு காந்திபுரம் பகுதியில் சமுத்திரக்கனி வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி இருக்கின்றார். இந்த நிலையில், இன்று காலை சமுத்திரக்கனி தன்னுடைய வீட்டின் முன்பாக ரத்த காயங்களுடன் உயிரிழந்த நிலை கிடந்துள்ளார்.
பின்னர் அந்த பகுதி வழியாக பால் கறப்பதற்காக சென்றவர்கள் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடப்பது தொடர்பாக அந்த பகுதியில் இருப்பவர்களிடம் தகவல் கொடுத்துள்ளனர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனை அடிப்படையாகக் கொண்டு, விரைந்து வந்த காவல் துறையினர் சமுத்திரக்கனியின் உடலை ஆய்வு செய்தனர். அப்போது அவரது கை கால் மார்பு போன்ற பகுதிகளில் அரிவாளால் தாக்கப்பட்ட வெட்டு காயங்கள் காணப்பட்டனர்.
இதனை அடுத்து, காவல்துறையினர் சமுத்திரக்கனி உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதோடு இந்த சம்பவம் தொடர்பாக வருசநாடு காவல்துறையினர் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த சொக்கர் என்ற நபர் மீதுதான் சந்தேகம் உள்ளதாகவும் அவரை காணவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.