fbpx

அதெல்லாம் ஒரு காலம்..!! ஒருநாளைக்கு ரூ.4 லட்சம் சம்பாதிச்சேன்..!! ஆனா சொந்த வீடு இல்ல..!! நடிகை ஷகீலா ஓபன் டாக்..!!

மலையாள திரையுலகில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஷகீலா. 90-களில் இவர் நடித்த கவர்ச்சி படங்கள் கேரளாவில் சக்கைப்போடு போட்டன. இவர் படங்களுடன் மோகன்லால், மம்முட்டி போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆனால் தோற்றுவிடும் என்று தயாரிப்பாளர்களே ஷகீலா படத்துடன் மோத பயந்து ஒதுங்கிப்போன சம்பவங்களும் உண்டு. இதையடுத்து, ஷகீலா படத்தில் நடிக்க தடை விதிக்கப்பட்டதால், அவர் தமிழ்நாட்டிற்கு வந்து செட்டில் ஆனார்.

பின்னர் ஆபாச படங்களில் நடிப்பதை தவிர்த்த ஷகீலா, திரைப்படங்களில் அவ்வப்போது காமெடி வேடங்களில் நடித்து வந்தார். இதையடுத்து, கடந்தாண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சி ஷகீலாவின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்நிகழ்ச்சிக்கு பின்னர் அவரை ஷகீலா அம்மா என ரசிகர்கள் அழைக்கத் தொடங்கினர்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை ஷகீலா, தான் இவ்ளோ நாட்களாக வாடகை வீட்டிலேயே வசித்து வருவது ஏன் என்பது குறித்து பேசி உள்ளார். அதன்படி, விக்கிபீடியாவில் உள்ள தகவலை போல் எனக்கு சொந்தமாக வீடு, பி.எம்.டபிள்யூ கார் எதுவும் இல்லை. நான் 40 வருஷமா வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறேன். நான் ஒரு நாளைக்கு ரூ.4 லட்சம் சம்பாதித்த காலமெல்லாம் இருந்தது.

நான் நடிப்பின் மூலம் நிறைய சம்பாதித்திருந்தாலும், அவற்றையெல்லாம் என் சகோதரி எடுத்து சென்றுவிட்டார். வீட்டில் பணத்தை வச்சிருந்தா வருமான வரி சோதனையில் சிக்கிவிடக் கூடும் எனக்கூறி தான் பத்திரமாக வைத்துக் கொள்கிறேன் என வாங்கியவர், என்னை ஏமாற்றிவிட்டார். அதனால் நான் மறுபடியும் பூஜ்ஜியத்தில் இருந்து என் வாழ்க்கையை தொடங்கினேன். தற்போது 10ஆம் வகுப்பு தேர்வு எழுத தயாராகி வருவதாகவும் ஷகீலா அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

Chella

Next Post

அப்படியே பலித்த ’அன்பே சிவம்’ திரைப்பட காட்சி..!! அதே ஒடிசாவில்.. அதே ரயில் விபத்து..!!

Sun Jun 4 , 2023
ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்து, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவின் பாலசோர் அருகே கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு அடுத்தடுத்து 2 ரயில்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 300 பேர் பலியானதாக கூறப்படும் நிலையில், 900-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் கூட பலியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது […]

You May Like