இன்று தஞ்சையில் நடந்த முன்னாள் அமைச்சர் ஆர் வைத்திலிங்கம் அவர்களின் மகன் திருமண விழாவில் பங்கேற்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உரையாற்றினார்.
அப்போது டிடிவி தினகரன், பன்னீர்செல்வம் உள்ளிட்ட இருவரும் ஒரே மேடையில் போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். அப்போது பேசிய டிடிவி தினகரன் சிலரின் சுயநலம் பேராசை உள்ளிட்டவை காரணமாக 6 வருடங்களுக்கு முன்னர் அதிமுகவிலிருந்து பிரிந்து மிக கனத்த இதயத்துடன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தொடங்கினோம் 6 வருடங்களுக்கு பின்னர் தற்போது அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை ஒரே மேடையில் சந்திப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
எங்களுடைய கஷ்டங்கள் அனைத்தையும் புறம் தள்ளிவிட்டு ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சி ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பன்னீர் செல்வத்துடன் நாங்கள் கைகோர்த்து இருக்கிறோம் ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வருவதற்காக அதிமுகவுடன் நாங்கள் எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லாமல் நினைவில் செயல்படுவோம் அதற்கான நல்ல தருணத்தை இந்த திருமண ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார் டிடிவி தினகரன்.