இந்த வருடத்தில் அரபிக் கடலில் ஏற்ப்பட்டிருக்கும் முதல் புயலாக பிபர்ஜாய் இருக்கிறது. இது அடுத்த 6 மணி நேரத்தில் தீவிர புயலாக மாற உள்ளது.
இதனால் மிக மெதுவாக கேரள மாநிலத்தில் மழைக்காலம் ஆரம்பமாகிறது என்றும், தெற்கு தீபகற்ப பகுதியில் கோடை காலம் பலம் இழக்கலாம் என்றும் வானிலை ஆய்வு மையம்.
அரபிக் கடலில் ஏற்பட்டிருக்கும் இந்த புயலானது, தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 2 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. காலை 8:30 மணி நிலவரம் படி கோவாவில் இருந்து 890 கிலோமீட்டர் தொலைவிலும், மும்பையில் இருந்து 1000 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டிருக்கிறது.
இந்தப் புயல் சின்னம் தீவிர புயல் சின்னமாக மாறுவதால் நிலப்பரப்பில் பருவ மழை காலம் தொடங்கி தீவிரமடைவதில் தாமதத்தை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. வழக்கமாக தென்மேற்கு பருவ மழை கேரள மாநிலத்தில் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி தொடங்குவது வழக்கம் ஆனால் 7 நாட்கள் தாமதமாக தொடங்குகிறது. வழக்கமான தாமரை தேதியையும் கடந்து மேலும் 3 நாட்கள் தாமதமாக இந்த வருடம் பருவமழை ஆரம்பமாகிறது.
பிபர்ஜாய் என்ற பெயரை வங்கதேசம் பரிந்துரைத்திருக்கிறது. இதற்கு ஆங்கிலத்தில் டிசாஸ்டர் என்றும், தமிழில் பேரறிவு அல்லது பேரிடர் என்றும் பொருள் இது வெள்ளிக்கிழமை அன்று தீவிர புயலாக மாறும் என்பதால் பெயருக்கு ஏற்றார் போல பேரழிவை உண்டாக்குமோ என்ற அச்சமும் எழுந்து இருக்கிறது.