fbpx

சூடான சாதத்துடன் தயிர் கலந்து சாப்பிடுபவர்களாக நீங்கள்!… இந்த தவறை இனி பண்ணிடாதீங்க!… ஆபத்து!

சூடான சாதத்தில் தயிர் கலந்து சாப்பிட்டால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம்

இந்தியாவில், அனைத்து சமையலறைகளிலும் பிரதானமாக உள்ள ஒரு உணவு, தயிர். இந்தளவுக்கு தயிரை மக்கள் விரும்பி உண்ண, அதன் தன்மைகளே முக்கிய காரணங்களாக உள்ளன. குறிப்பாக தயிரின் குளிர்ச்சி, இனிமையான சத்துகளே அவை பலராலும் விரும்பப்பட காரணமாக இருக்கிறது. இதுவொரு பக்கம் இருந்தாலும் விருப்ப உணவு என்பதைத்தாண்டி தினமும் தயிர் சாப்பிட்டால் அது நமக்கு அளிக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? பாலிலிருந்து தயாரிக்கப்படும் பொருளான தயிரில் கால்சியம், வைட்டமின் பி2, வைட்டமின் பி12, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை நிறைந்துள்ளன. ஆரோக்கியத்திற்கு மட்டுமன்றி, சருமத்திற்கும் சிறந்த மாய்ஸ்சரைசராக தயிர் உள்ளது. அதன் அற்புதமான ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்.

தயிர் பாலிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு சிறந்த புரோபயாடிக் உணவுப்பொருளாகும். புரோபயாடிக் என்பது, குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. தயிரில் உள்ள நன்மைபயக்கும் பாக்டீரியாக்கள், வீக்கமடைந்த செரிமான அமைப்பை சரிசெய்யக்கூடியது. மேலும் வயிற்று வலிக்கு சிகிச்சையளிப்பதில் சிறந்தது. தயிர் அதிக அளவில் நல்ல பாக்டீரியாக்களைக் கொண்டுள்ளதால் அஜீரண கோளாற்றை எளிதில் குணமாக்கும். தயிரில் உள்ள பாக்டீரியாக்கள், நோயை உண்டாக்கும் கிருமிகளை எதிர்த்து குடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். தயிரில் வைட்டமின் மற்றும் புரோட்டீன் நிரம்பியுள்ளது என்பதாலும், அதில் உள்ள லாக்டோபாகிலஸ் காரணமாகவும் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் மேம்படும்.

தயிர் சருமத்தை ஈரப்பதமாக்குகிறது. மேலும் வறண்ட சருமத்தை இயற்கையாகக் குணப்படுத்துகிறது. தயிரில் உள்ள லாக்டிக் அமிலம், சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி, முதுமையின் ஆரம்ப அறிகுறிகளை எதிர்த்துப் போராட உதவும். ஃபேஸ் பேக்குகளுக்கு இது ஒரு சிறந்த அழகுப் பொருளாகவும் உள்ளது. தயிர் இயற்கையான சன்-டேன் நீக்கியாகும் (சூரியனால் தோல் நிறம் மாறுவதை சரிசெய்து, சருமத்தை பழைய நிலைக்கு கொண்டு செல்வது). தயிர், தோலில் உள்ள பிக்மென்ட்டேஷன், கரும்புள்ளிகளைக் குறைக்கும். மேலும் சருமத்தில் உள்ள எண்ணெய் தன்மையைக் குறைக்கும்.

தயிர் ரத்த அழுத்தத்தைப் பராமரிக்க உதவும். அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் (AHA) ஆய்வின்படி, தயிர் உட்கொள்வது உயர் ரத்த அழுத்த அபாயத்தைக் குறைக்க உதவும். மேலும் கொழுப்பு இல்லாத தயிர் சாப்பிடுபவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. தினசரி தயிர் உட்கொள்வது, கால்சியம் உட்கொள்ளலுக்குப் பங்களிக்கிறது. இது எலும்புகளை வலுவாக்கும். வழக்கமான தயிரில் எலும்பை வலுப்படுத்தும் கனிம கால்சியம் உள்ளது. முக்கால் கப் தயிரில் 275 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. இது நல்ல எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவும்.

அதேபோல, தயிரை எல்லோரும் எடுத்துக்கொள்ளலாம் என்ற உணவாக பரிந்துரைக்க இயலாது. ஒருசிலர் அதை தவிர்க்கத்தான் வேண்டும். குறிப்பாக மூட்டுவலி அல்லது மூட்டுப் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் தயிர் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் புளிப்பு உணவாக இருப்பதால் மூட்டு வலி அதிகரிக்கும். அதேபோல இரவில் தயிர் சாப்பிடுவதை தவிர்க்கலாம். சூடான சாதத்துடன் தயிர் கலந்து சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பதால் அதை தவிர்க்கவும். பொதுவாகவே குளிர்ந்த உணவுப் பொருட்களை சூடான சாதத்துடன் கலக்கும்போது, அது அரிசியின் தன்மையைப் பாதித்து, செரிமானப் பிரச்சனைகளை உண்டாக்கும்.

Kokila

Next Post

விவசாயிகளுக்கு குட் நியூஸ்...! குறைந்தபட்ச ஆதார விலை ரூ.4,000-லிருந்து ரூ.6,377ஆக அதிகரிப்பு...!

Thu Jun 8 , 2023
2023-24-ஆம் ஆண்டு கரீஃப் சந்தைப் பருவத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2023-24-ஆம் ஆண்டு கரீஃப் சந்தைப்பருவத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) மத்திய அரசு அதிகரித்துள்ளது. விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு லாபகரமான விலையில் கீழ்கண்டவாறு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நிலக்கடலை குறைந்தபட்ச ஆதார விலை ஒரு குவிண்டால் ரூ.4,000லிருந்து ரூ.6,377ஆக […]

You May Like