தமிழகத்தில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரையில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வு நடந்தது. பொது தேர்வு முடிவு அடைந்த பிறகு மாணவ, மாணவிகளுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டது. கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் மாதம் ஒன்றாம் தேதி பள்ளிகளை திறப்பதற்கு மாநில அரசு திட்டமிட்டு இருந்தது ஆனால் வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறக்கும் தேதி அடுத்தடுத்து 2 முறை தள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், கோடை விடுமுறை முடிவடைந்து ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டனர். மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவ மாணவிகள் இன்று காலை முதலே மிகுந்த ஆர்வத்துடன் பள்ளிக்கு வருகை புரிந்தனர்.
இந்த நிலையில் தான் சென்னை விருகம்பாக்கத்தில் இருக்கின்ற ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மிக நீண்ட இலைக்குப் பின்னர் சக தோழிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோரை பார்த்ததால் மாணவிகள் உற்சாகத்துடன் காணப்பட்டனர்.