சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம், ஜேஇஇ 2023 தேர்வர்கள் வளாகத்தைப் பார்வையிட்டு ஒருநாள் சிறப்பு அனுபவங்களைப் பெறும் வகையில் செயல்விளக்க நாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.இந்த நிகழ்வில் ஆன்லைனில் (17 மற்றும் 18 ஜூன் 2023), ஆஃப்லைனில் (24 ஜூன் 2023) ஆகிய நாட்களில் இணைந்து கொள்ளலாம்.
விருப்பம் உள்ளவர்கள் பின்வரும் இணைய முகவரியில் முன்பதிவு செய்தல் அவசியம். visit.askiitm.com . முன்பதிவு செய்வதற்கான கடைசி நாள் 16 ஜூன் 2023.தேர்வு எழுதுவோரும் அவர்களின் பெற்றோர்களும் இக்கல்வி நிறுவன வளாகத்தைப் பார்வையிட்டு, ஐஐடி மெட்ராஸ்-ன் தற்போதைய மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களிடம் கேள்விகளை எழுப்பி பதில்களைப் பெறலாம்.
மேலும் செயல்விளக்க விரிவுரைகளைக் கேட்கவும், மாணவர் கிளப்புகளை சந்திக்கவும் தேர்வெழுதுவோருக்கு வாய்ப்புக் கிடைக்கும்.