fbpx

புற்றுநோயால் துணை நடிகர் பிரபு மரணம்!… இறுதி சடங்கிற்கு உதவிய பிரபலம்!

தமிழ் திரைப்பட துணை நடிகர் பிரபு புற்றுநோயால் காலமானார்.

சினிமாவில் சாதிக்கவேண்டும் என சென்னைக்கு வந்து வாய்ப்பு கிடைத்து சாதிப்பவர்களே அதிகம் . அப்படி சினிமாவில் பல படங்களில் சின்ன ரோல்களில் மட்டும் நடித்து இருப்பவர் பிரபு. தமிழ் திரைப்பட துணை நடிகர் பிரபு புற்றுநோயால் மரணமடைந்தார். இவர், நடிகர் தனுஷின் படிக்காதவன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். இதனிடையே, அண்மையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் இருந்தவருக்கு இசையமைப்பாளர் டி.இமான் மருத்துவ உதவிகள் செய்து வந்தார். இந்நிலையில், இன்று பிரபு உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது உடலை இசையமைப்பாளர் இமானே தகனம் செய்தார்.

Kokila

Next Post

ரஜினியின் கபாலி படத்தை தெலுங்கில் தயாரித்த தயாரிப்பாளர் போதைப்பொருள் வழக்கில் கைது!

Thu Jun 15 , 2023
கபாலி தெலுங்கு திரைப்பட விநியோகஸ்தர் கே.பி.சௌத்ரி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து இருந்த கபாலி படம் 2016ல் வெளிவந்தது. பா.ரஞ்சித் இயக்கிய அந்த படத்திற்கு விமர்சன ரீதியில் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் அதன் வசூல் 1000 கோடிக்கும் அதிகம் என தயாரிப்பாளர் தாணு பேட்டி அளித்தார். கபாலி படத்தின் தெலுங்கு உரிமையை கே.பி.சவுத்ரி என்பவர் வாங்கி இருந்தார். தயாரிப்பாளராகவும் பட விநியோகஸ்தராக […]
ரஜினி

You May Like