fbpx

மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…! இன்று காலை 10 மணி முதல்…! யாரெல்லாம் இதற்கு தகுதி…? முழு விவரம்…

சேலம்‌ மாவட்டத்தில்‌ தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாம்‌ இன்று நடைபெறவுள்ளது.

சேலம்‌ மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்‌ மற்றும்‌ பெண்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாம்கள்‌ நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி இன்று சேலம் கோரிமேட்டில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு வளாகத்தில்‌ தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாம்‌ நடைபெறவுள்ளது.

இம்முகாமில்‌ உற்பத்தி, தகவல்‌ தொழில்நுட்பம்‌, ஜவுளி, வங்கி சேவைகள்‌, காப்பீடு, மருத்துவம்‌, கட்டுமானம்‌ உள்ளிட்ட முக்கிய துறைகளை சார்ந்த சேலத்தின்‌ பல்வேறு பகுதிகளில்‌ உள்ள முன்னனி வேலையளிக்கும்‌ நிறுவனங்கள்‌ தங்களின்‌ காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்யவுள்‌ளனர்‌.

இன்று காலை 9 மணி முதல்‌ மதியம்‌ 3 மணி வரை நடைபெறவிருக்கும்‌ இம்முகாமில்‌ 8-ம்‌ வகுப்பு, 10-ம்‌ வகுப்பு, 12-ம்‌ வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல்‌, செவிலியர்‌, ஆசிரியர்‌, தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்விதகுதி உள்ளவர்களும்‌ கலந்துகொண்டு பயன்பெறலாம்‌.

Vignesh

Next Post

வாவ்...! 11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.10,000...! உடனே இதை செய்து முடிக்க வேண்டும்...!

Fri Jun 16 , 2023
11, 12ஆம்‌ வகுப்பு பயிலும்‌ பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே தமிழ்‌ வளர்ச்சித்‌ துறை சார்பில்‌ தமிழில்‌ கவிதை, கட்டுரை, பேச்சுப்‌ போட்டிகள்‌ நடைபெறவுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தனது செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; சேலம்‌ மாவட்டத்தில்‌ 11, 12-ஆம்‌ வகுப்பு பயிலும்‌ பள்ளி, கல்லூரிகளில்‌ பயிலும்‌ மாணவ, மாணவியர்களிடையே தமிழில்‌ படைப்பாற்றலையும்‌, பேச்சாற்றலையும்‌ வளர்க்கும்‌ நோக்கில்‌ ஆண்டு தோறும்‌ தமிழ்‌ வளர்ச்சித்‌ துறை சார்பில்‌ தமிழில்‌ கவிதை, கட்டுரை, […]

You May Like