வாடிக்கையாளர்களை கவரும் வகையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் Vi நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை தக்க வைக்க பல்வேறு சிறப்பு சலுகைகளுடன் கூடிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக, ஓர் ஆண்டுக்கு செல்லுபடியாகும் 365 ரீசார்ஜ் திட்டங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.
இந்த திட்டத்தில் தினமும் 2 ஜிபி மொபைல் டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், 100 எஸ்.எம்.எஸ் இலவசம், Vi Hero unlimited benefits போன்ற வசதிகள் கிடைக்கும். மேலும், 50 ஜிபி கூடுதல் டேட்டா, ஓராண்டு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா திட்டம், Vi Movies & Tv Vip access என பல சலுகைகள் கிடைக்கும்.
ரூ.2999 திட்டம் :
இந்த வருட திட்டத்தில் மொத்தமாக 850 ஜிபி அன்லிமிடெட் டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் போன்ற வசதிகள் கிடைக்கும். மேலும், ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ் வசதியுடன், Vi Movies classic access, Binge All night போன்ற சிறப்பு வசதிகளும் கிடைக்கும்.
ரூ.2899 திட்டம்
இந்த திட்டத்தில் தினமும் 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும். Vi hero unlimited, Binge all night, weekend data rollover, data delights போன்ற சலுகைகள் கிடைக்கும். அதுமட்டுமின்றி அன்லிமிடெட் வாய்ஸ் கால், ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ் வசதி கூடுதலாக 50 ஜிபி டேட்டா, Vi movies & tv vip access போன்ற சலுகைகள் கிடைக்கும்.
ரூ.1799 திட்டம் :
குறைவான டேட்டா தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் உதவியாக இருக்கும். இதில் மொத்தம் 24 ஜிபி டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், ஒரு நாளைக்கு 3600 எஸ்.எம்.எஸ் , Vi movies & tv basic accesss போன்ற சலுகைகள் கிடைக்கும்.