fbpx

முடிந்தது கோடை விடுமுறை..!! தொடங்கியது மழை விடுமுறை..!! கசப்பான முடிவெடுக்கும் பள்ளிக்கல்வித்துறை..!!

தமிழ்நாட்டில் கடும் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளி போன நிலையில், மீண்டும் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. விடா மழை காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் தொடங்கிய நிலையில் தற்போது மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் பள்ளி கல்வித்துறை முக்கியமான ஒரு முடிவை விரைவில் எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, பள்ளிகள் மீண்டும் திறந்த பின் காலாண்டு தேர்வு வரை தொடர்ந்து சனிக்கிழமை பள்ளிகளை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ”ஏற்கனவே விடப்பட்ட விடுமுறைகளை கணக்கில் வைத்து சனிக்கிழமைகளில் கூடுதல் வகுப்பு நடத்த முடிவு செய்துள்ளோம். இப்போது மேலும் வரும் விடுமுறைகளை கணக்கில் வைத்து கூடுதலாக மேலும் சில சனிக்கிழமைகள் விடுமுறையை ரத்து செய்வோம். எவ்வளவு மணி நேரம் இழக்கப்பட்டு உள்ளதோ அதை வைத்து கூடுதல் சனிக்கிழமையை பணி நாட்களாக அறிவிப்போம் என்று கூறுகின்றனர்.

Chella

Next Post

Gold Silver Rate..!! தங்கம், வெள்ளி விலையில் மாற்றமா..? இன்றைய நிலவரம் இதுதான்..!!

Mon Jun 19 , 2023
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், இன்று ஒரு கிராம் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையில் விற்பனையாகி வருகிறது. நேற்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5542 என விற்பனையாகி வந்த நிலையில், இன்று விலையில் மாற்றமின்றி அதே ரூ. 5545 என விற்பனையாகிறது. அதேபோல் ஆபரண தங்கம் ஒரு சவரன் 44,336 […]

You May Like