fbpx

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சற்று நேரத்தில் அறுவை சிகிச்சை…! தயாரான மருத்துவர்கள்…!

கடந்த அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது வேலைவாய்ப்பு முறைகேடு விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த வாரம் விசாரணைக்காக அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 3 ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இருதய அறுவை சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது.

அரசு மருத்துவமனை சிகிச்சையைத் தவிர அவரது குடும்ப உறுப்பினர்களும் தனிப்பட்ட முறையில் கேட்டு கொண்டதன் பெயரில் அப்பல்லோ மருத்துவமனையின் பிரபல மருத்துவர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்ய உள்ளனர். இந்த அறுவை சிகிச்சைக்கு பின் அமைச்சரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Vignesh

Next Post

பிரசவத்திற்கு பின் ஏற்படும் முதுகுவலியால் அவதியா?... இதை 3 நாள் மட்டும் சாப்பிடுங்க!... எல்லா வலியும் காணாமல் போயிடும்!

Wed Jun 21 , 2023
பூண்டு லேகியத்தை சாப்பிடுவதால், வாயுத்தொல்லையினால் உருவாகும் பிடிப்பு, வயிறு வலி, கை மற்றும் கால், முதுகுவலி போன்ற வலியிலிருந்து அவதிப்படுபவர்களுக்கு, இதை செய்து தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டு வந்தாலே பொதும், நல்ல நிவாரணம் கிடைக்கும். மேலும் இதை ஒரு மாத காலம் சாப்பிட்டு வந்தால் வாயுத்தொல்லையிலிருந்து முற்றிலும் விடுபட முடியும். இந்த லேகியத்தை சாப்பிடுவதால் மலச்சிக்கல் மற்றும் இடுப்பு வலியிலிருந்து நல்ல தீர்வு கிடைக்கும். பூண்டு லேகியம் செய்ய […]

You May Like