நடிகர் விஜய் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவரது ரசிகர்கள் ஆங்காங்கே கொண்டாட்டங்களை தொடங்கியுள்ளன. பிறந்தநாள் சிறப்பு தொகுப்பு இதோ!
நடிகர் விஜய்யின் பிறந்தநாள் நாளை (ஜூன் 22) கொண்டாடப்பட உள்ளது. அவரது கோடிக்கணக்கான ரசிகர்களும், கோலிவுட் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றன. இருப்பினும் அவரின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தற்போதே களைகட்டத் தொடங்கிவிட்டன என்று தான் சொல்ல வேண்டும். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கத்தினர் பல்வேறு ஊர்களில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். அதுமட்டுமின்றி ஏழைகளின் பசியாற்றும் விதமாக இலவசமாக உணவும் வழங்கப்பட்டு வருகின்றன. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் இரத்த தான முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. வழக்கத்தை விட இந்த ஆண்டு சற்று கூடுதலாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கு காரணம் நடிகர் விஜய்யின் அரசியல் எண்ட்ரி தான். சமீபத்தில் பொதுத்தேர்வில் சாதித்த மாணவ, மாணவிகளை அழைத்து அவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி கெளரவப்படுத்தினார் விஜய். இதுதான் அவரது அரசியல் பயணத்தின் ஆரம்பமாக பார்க்கப்படுகிறது.
விஜய்யின் வெறித்தனமான ரசிகர்கள் தளபதி மீதான அன்பை வெளிப்படுத்தும் விதமாக தமிழகமெங்கும் போஸ்டர்கள் ஒட்டி ஆரவாரம் செய்து வருகின்றனர். குறிப்பாக வருங்கால முதல்வரே என ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அரசியல் வட்டாரத்திலும் சற்று சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டு ரசிகர்களை மிஞ்சும் வகையில் வெளிநாட்டில் உள்ள விஜய் ரசிகர்கள் அமெரிக்காவில் ஒரு மாஸ் சம்பவத்தை செய்து அசத்தி உள்ளனர். நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக கனடாவை சேர்ந்த விஜய் ரசிகர்கள், புகழ்பெற்ற நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் உள்ள பில்போர்டில் நடிகர் விஜய்யின் போஸ்டர்கள் ஒளிபரப்பப்பட்ட சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். உலகளவில் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ளதால், தளபதிக்கு இது மறக்கமுடியாத பிறந்தநாளாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரி-ரிலீஸ் ஆகும் கிளாஸிக் படங்கள்.. என்னென்ன தெரியுமா? நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படங்கள் மீண்டும் சிறப்பு காட்சிகளாக திரையிடப்படுவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடித்து, 1992 ஆம் ஆண்டு ‘நாளைய தீர்ப்பு’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ‘விஜய்’. உங்க வீட்டு செல்லப்பிள்ளை என விஜய் நடித்த படத்தில் இடம் பெற்ற பாடல்களில் ஒரு வரி வரும். அதற்கேற்றாற்போல் இந்த 31 ஆண்டுகளில் விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டாரோ, அதற்கு ஈடாக தமிழ்நாடு மக்களின் குடும்பங்களில் ஒருவராகவும் பார்க்கப்படுகிறது.
இதனிடையே நாளை (ஜூன் 22) விஜய் தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவரது ரசிகர்கள் இந்த நாளை நற்பணி நாளாக மாற்ற திட்டமிட்டுள்ளனர். நாளைய தினம் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிப்பது, இரத்ததானம், அன்னதானம், வழிபாட்டு தலங்களில் சிறப்பு வழிபாடு என கொண்டாட்டங்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் ரெடியாக உள்ளனர். அதேசமயம் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இருந்து முதல் பாடலாக ‘நா ரெடி’ என்ற பாடல் பிறந்தநாள் பரிசாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார். இது அவரின் குரலில் வெளியாகும் 36வது பாடலாகும். இந்த பாடலின் ப்ரோமோ வெளியானது. பாடல் வரிகள் விஜய்யின் அரசியல் வருகையை குறிப்பதாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதேபோல் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள 68வது படத்தின் அப்டேட் வெளியாகலாம் என கூறப்படுகிறது. இப்படியான நிலையில், விஜய்யின் பிறந்தநாளை மேலும் சிறப்பிக்கும் வகையில், தமிழ்நாட்டில் செயல்படும் தியேட்டர்களில் அவர் நடித்த படங்களை ரீ- ரிலீஸ் செய்யப்படுகிறது. இன்று இரவு காட்சி தொடங்கி நாளை ஒருநாள் முழுக்க விஜய் நடித்த பல படங்கள் திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 2005 ஆம் ஆண்டில் வெளியான திருப்பாச்சி, 2007 ஆம் ஆண்டு வெளியான போக்கிரி, 2014 ஆம் ஆண்டு வெளியான ‘கத்தி’, 2017 ஆம் ஆண்டு வெளியான மெர்சல், 2021 ஆம் ஆண்டில் வெளியான மாஸ்டர் ஆகிய படங்கள் திரையிடப்படுகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சில படங்கள் 90ஸ், 2கே கிட்ஸ்கள் சிறுவயதில் இருக்கும்போது வெளியான திரைப்படங்கள் என்பதால் அதனை மீண்டும் காண ஆவலுடன் உள்ளனர்.