உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் சமீனா(23) என்ற இளம்பெண் மீது ஏற்பட்ட திருட்டு சந்தேகத்தால் அவருடைய உறவினர்களே அவரை கொடூரமான முறையில் கொலை செய்திருப்பது காசியாபாத் சித்தார்த் விஹார் பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
23 வயதான சமீனா கடந்த திங்கள் கிழமை காசியாபாத் சித்தார்த் விகாரில் இருக்கின்ற தன்னுடைய உறவினர்களான ஹீனா மற்றும் ரமேஷ் உள்ளிட்டோரின் மகனின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்றுக் கொள்வதற்காக சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் காணாமல் போனதாக தெரிகிறது. ஆகவே சமீனா தான் அவற்றை திருடி சென்றதாக ஹீனாவும், ரமேஷும் சந்தேகத்துள்ளனர்.
ஆகவே இந்த திருட்டை ஒப்புக் கொள்ளுமாறு குச்சிகள் மற்றும் கம்பிகள் உள்ளிட்டவற்றை வைத்து சமீனாவை தாக்க தொடங்கி இருக்கின்றனர். இந்த திருட்டை ஒப்புக்கொள்ள வைப்பதற்காக சமியின் ஆவின் உடலை வெட்டி சித்திரவதை செய்திருக்கிறார்கள். சமீனாவின் அலறல் சத்தம் அக்கம் பக்கத்திற்கு கேட்டு விடக் கூடாது என்பதற்காக பாடலை வேகமாக ஒலிக்க செய்திருக்கிறார்கள்.
அவர்களின் கொடுமை தாங்க முடியாமல் சமீனா பரிதாபமாக உயிரிழந்தார். உடனடியாக சீனா மற்றும் ரமேஷ் உள்ளிட்ட இருவரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். ஆனால் வேகமாக சத்தம் வைத்து ஒலித்துக் கொண்டிருந்த பாடலை நிறுத்த மறந்து விட்டனர்.
2 நாட்களுக்கு முன்னதாகவே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அன்றைய தினம் அந்த பெண்ணை கொலை செய்த உறவினர்கள் வீட்டிலிருந்து தப்பிச் சென்று விட்ட நிலையில், கடந்த புதன்கிழமை அக்கம்பாக்கத்தினர் அந்த வீட்டில் 2 நாட்களாக இடைவிடாமல் பாடல்கள் சத்தமாக ஒலிப்பதை கேட்டு சந்தேகம் அடைந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பின்னர் காவல் துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தியதில், இந்த விவரங்கள் அனைத்தும் தெரிய வந்துள்ளது ஆகவே சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்ட காவல்துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.