கன்னியாகுமரி அருகேயுள்ள மகாராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி லக்ஷ்மணப் பெருமாள் இவருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இருவரும் கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர் இந்த நிலையில் இவரது 2வது மகள் சிவப்பிரியா என்பவர் 8ம் வகுப்புபடித்துவந்துள்ளார.
இந்த நிலையில், கடந்த சில தினங்களாக மாநடி சிவபெரியவை தலைமை ஆசிரியரின் அறிவுறுத்தலின் போது வகுப்பு ஆசிரியர் ஏழாம் வகுப்பு அனுப்பி இருக்கிறார். இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் சார்பாக பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்படவில்லை மாணவியின் பெற்றோருக்கு இது தொடர்பாக சொல்லாமல் இருந்திருக்கிறார். அதோடு கடந்து சில தினங்களாக அந்த மாணவியுடன் படிக்கும் சக மாணவிகளின் கேலி, கிண்டல் காரணமாக, மனமுடைந்து காணப்பட்ட சிவப்பிரியா நேற்று முன்தினம் இரவு தூக்க மாத்திரை சாப்பிட்டு உறங்குவதற்காக சென்றுவிட்டார்.
இந்த நிலையில், காலையில் பள்ளிக்கு செல்வதற்காக வழக்கம் போல மகளை அவருடைய தாய் எழுப்பிய போது அவர் மயக்க நிலையில் இருந்துள்ளார். இதனை தொடர்ந்து, உறவினர்கள் அனைவரும் மாணவியை மீட்டு கொட்டாரம் பகுதியில் இருக்கின்ற ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வரும் மாணவி சிவப்பிரியாவிடம் கன்னியாகுமரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.