கோவையைச் சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் வடவள்ளியில் இருந்து ஒண்டிப்புதூர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். கோவையின் முதல் பெண் டிரைவரான ஷர்மிளாவுக்கு பெண்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் இவர் பேருந்து ஓட்டும் வீடியோ அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வருவது வழக்கம். இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள கோவை சென்றுள்ள திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநரான ஷர்மிளாவை, காந்திபுரம் பேருந்து நிலையத்தில் நேரில் சந்தித்து கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். மேலும் ஷர்மிளா இயக்கிய பேருந்தில் கனிமொழி பயணம் மேற்கொண்டார். மேலும் பேருந்தில் பயணித்த பெண்களிடமும் உரையாடினார். காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பீளமேடு பகுதி வரை பயணித்த அவர், ஷர்மிளாவிற்கு கடிகாரத்தை பரிசளித்து கட்டியணைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
இந்நிலையில் ஷர்மிளா விளம்பரத்திற்க்காக இப்படி செய்வதாக பணிநீக்கம் செய்யப்பட்டார். இதுகுறித்து பேட்டியளித்த பேருந்தின் உரிமையாளர் கண்ணன் ஷர்மிளாவுடன் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை எனவும் அவர் தான் பணிக்கு செல்லாமல் பேருந்தை பாதியில் நிறுத்திவிட்டு இங்கு வந்து பணியில் இருந்து சென்றுவிட்டார், எந்த பிரச்சனையாக இருந்தாலும் இப்படி செய்யக்கூடாது எனவும் தெரிவித்தார். மேலும் பேருந்து ஓட்டும் போது இப்படி வீடியோ எடுக்கக்கூடாது என்று கருத்தும் தெரிவித்துள்ளார்.