விஜய் டிவியில் பல ரியாலிட்ரி ஷோக்கள் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகின்றன. அதுமட்டுமல்லாது இதில் ஒளிபரப்பாகும் ரியாலிட்ரி ஷோக்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் இருக்கிறது. அவ்வாறான நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் ‘ஸ்டார்ட் மியூசிக்’. இந்நிகழ்ச்சியானது 3 சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில், தற்போது இதன் நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியினை தொகுப்பாளினி பிரியங்கா தான் தொகுத்து வழங்குகிறார்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் சீசன் 6 இன் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். அப்போது அந்த சமயத்தில் “காதல் சுத்துதே என்னை சுத்துதே” பாடல் ஒலிக்க விடப்படுகின்றது. அதற்கு குயின்ஷியும், நிவாஷினியும் ஆக்ஷன் கொடுத்து அந்தப் பாடலை ஷிவினைக் கண்டுபிடிக்க வைக்கின்றனர். அப்போது நிவாஷினி வாயை முழுவதுமாகத் திறந்து அந்தப் பாடலை கூறுகின்றார். அதற்கு பிரியங்கா “இதுவரைக்கும் ஸ்டார்ட் மியூசிக் உடைய வரலாற்றில் ஒட்டு மொத்த பாடலையே வாயினால் சொன்னது நிவாஷினி தான்” எனக் கூறி அவரைக் கலாய்க்கின்றார்.