fbpx

‘கருவில் கரு’ அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட நபர்!… 36 ஆண்டுகளாக இரட்டை குழந்தையுடன் வாழ்ந்த ஆச்சரியம்!

மகாராஷ்டிராவை சேர்ந்த நபர் ஒருவர் ‘கருவில் கரு’ என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரை சேர்ந்த வர் சஞ்சு பக்த். 1963 இல் பிறந்த அவர் தனது பெரிய வயிற்றின் காரணமாக “கர்ப்பிணி” என்று அழைக்கப்படுகிறார். ஆனால், 36 வருடங்களாகத் தன் வயிற்றில் இரட்டை குழந்தைகளை சுமந்துகொண்டிருப்பது அவருக்கு தெரியாது. சஞ்சு பகத்தின் வயிறு சிறு வயதில் இருந்தே பெரியதாக இருந்துள்ளது. தனது வயதுடைய குழந்தைகளை விட வயிறு பெரிதாக இருந்தாலும் அவர் ஆரோக்கியமாகவே இருந்துள்ளார். தனக்கு 20 வயதாகும் வரை அவர் தனது பெரிய வயிறை பற்றி கவலைப்படவில்லை.

அவர் தினமும் ஒரு பண்ணையில் வேலை செய்து வந்தார், ஆனால் அவரது வயிறு ஆபத்தான அளவில் பலூன் போல காணப்பட்டது. எனினும் சஞ்சு பகத் தனது வீங்கிய வயிறை பற்றி கவலைப்படாமல், வேலையைத் தொடர்ந்தார். அவரின் நண்பர்கள் அடிக்கடி அவரை கிண்டல் செய்து வந்தனர். இது அவரது குடும்பத்தின் கவலையாகவும் மாறியது. ஆனால் 1999 ஆம் ஆண்டில், வயிற்று வீக்கம் காரணமாக அவருக்கு சுவாசிக்க கடினமாக இருந்தது, மேலும் அவர் மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர், அஜய் மேத்தா, சஞ்சு பகத் கட்டியால் அவதிப்பட்டதாகக் கருதினார். அவரின் வயிற்றில் கட்டி இருக்கலாம் என்று கருதி மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். ஆனால் அவரின், ​​ஒரு பெரிய கட்டிக்கு பதிலாக, அவர் வயிற்றில் குழந்தை இருப்பதை கண்டுபிடித்தனர்.

மருத்துவர்கள் கைகால்கள், பிறப்புறுப்பின் சில பகுதிகள், தாடைகள் மற்றும் கைகால்கள் ஆகியவற்றைக் கண்டறிந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் ஆரம்பத்தில் பகத்தின் வழக்கு “மறைந்துபோகும் இரட்டை நோய்க்குறி” (vanishing twin syndrome) என்ற நோய் என்று நினைத்தார்கள். அதாவது அவரது இரட்டையர் கர்ப்ப காலத்தில் இறந்துவிட்டதாக நினைத்தனர். ஆனால் பின்னர் பரிசோதனை மற்றும் ஆய்வில் அவருக்கு இருக்கும் பாதிப்பு இது “கருவில் கரு” (fetus in fetu).என்று கண்டறியப்பட்டது. பிறக்காத இரட்டை குழந்தை உடலில் ஒரு ஒட்டுண்ணி போல வாழ்கிறது, பின்னர் இரட்டை குழந்தைகளை மருத்துவர்கள் அகற்றிவிட்டனர். எனினும் தனது வயிற்றில் இருந்து அகற்றப்பட்ட குழந்தைகளை சஞ்சு பார்க்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. கருவில் உள்ள கரு மிகவும் அரிதான நிலை என்று மருத்துவ உலகம் கூறுகிறது. ஒவ்வொரு 5,00,000 பிறப்புகளில் ஒருவருக்கு மட்டுமே இந்த நிலை ஏற்படுவதாகக் கருதப்படுகிறது.

Kokila

Next Post

காலத்தை வென்ற கவியரசர் கண்ணதாசன் பிறந்தநாள் இன்று!... என்றும் மனதில் நிலைத்த பாடல்களின் சிறப்பு தொகுப்பு!

Sat Jun 24 , 2023
காலத்தால் அழியாத காவியங்களைத் தன் பாடல் வரிகளில் கரைத்து, மக்‍களின் உணர்வுகளோடு கலந்துவிட்ட கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள் இன்று. சொந்த வாழ்க்கையை அவர் அளவுக்கு வெளிப்படையாக பகிர்ந்து கொண்டவர்கள் யாருமில்லை – ‌அவரது பெயர் முத்தையா 1927-ஆம் ஆண்டு ஜுன் 24ந் தேதி, 8 வது பிள்ளையாக பிறந்து தத்து பிள்ளையாக வளர்ந்து, தமிழர் நெஞ்சங்களில் தனது பாடல் வழி நீக்கமற நிறைந்த கவியரசு கண்ணதாசனின் பிறந்த நாள் இன்று. […]

You May Like