பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற 440க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் மற்றும் பி.டெக் படிப்புகளில் சேர்வதற்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு அதன் மூலமாக மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அதன்படி 2023-24 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்விற்கு 1,87,693 மாணவ, மாணவிகள் விண்ணப்பம் செய்திருந்தனர்.
இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இணையதளம் மூலமாக கடந்த 2ம் தேதி முடிவுற்றது சான்றிதழை சரியாக பதிவேற்றம் செய்து அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கு தரவரிசை பட்டியல் நாளைய தினம் வெளியாக உள்ளது.