ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் சுரேகா வாணி. இவர், தமிழில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த உத்தமபுத்திரன் திரைப்படத்தின் மூலம் துணை நடிகையாக அறிமுகமானார். அதன்பின், தெலுங்கில் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். அவ்வப்போது தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு ஏராளமான பாலோவர்களும் உள்ளனர்.
இதற்கிடையே, நடிகை சுரேகா வாணியின் கணவர் சுரேஷ் தேஜா கடந்த 2019ஆம் ஆண்டு உயிரிழந்தார். இந்த ஜோடிக்கு சுப்ரிதா என்கிற மகள் உள்ளார். தற்போது மகளுடன் தனியாக வசித்து வரும் சுரேகா வாணி, இரண்டாம் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக அடிக்கடி செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால், அதுகுறித்து சுரேகா வாணி எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மெளனம் காத்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை சுரேகா வாணி, நைட் பார்ட்டியில் ஆண் நண்பர் ஒருவருடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த நபருக்கு உதட்டி முத்தம் கொடுத்தபடி இருக்கும் நடிகை சுரேகா வாணியின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை திட்டித்தீர்த்து வருகின்றனர். திருமணம் வயதில் மகளை வைத்துக்கொண்டு இப்படி செய்யலாமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நடிகை சுரேகா வாணியுடன் நெருக்கமாக இருக்கும் நபர் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் கேபி செளத்ரி தானாம். இவர் சுரேகா வாணியை விட 10 வயது குறைந்தவர் ஆவார். இவர் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய போதை பொருள் வழக்கில் சிக்கியவர் ஆவார். அவருடன் சுரேகா வாணிக்கும் நெருக்கம் இருப்பதால், அவருக்கு போதை வழக்கில் தொடர்பு இருக்க வாய்ப்புகள் இருப்பதாக கருதி, அவரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.