Benz vs Ola..!! மழை வெள்ளத்திலும் மாஸ் காட்டிய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்..!! பென்ஸ் காரே திணறிடுச்சு..!! வீடியோ உள்ளே..!!

மழை நீர் சூழ்ந்த சாலையில் மெர்சிடீஸ் பென்ஸ் பி கிளாஸ் கார் சிக்கி இருக்கும்போது அதே பகுதியில் ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எந்த பிரச்சனையும் இல்லாமல் நீரை கடந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுதொடர்பான வீடியோவில், ஒரு நெடுஞ்சாலையில் சர்வீஸ் ரோட்டில் மழை வெள்ளநீர் அதிக அளவில் தேங்கி நிற்கிறது. நெடுஞ்சாலையில் பல கார்கள் சென்று கொண்டிருக்கிறது. இந்த வெள்ள நீருக்குள் புகுந்து செல்ல முயன்ற மெர்சிடிஸ் பென்ஸ் பி கிளாஸ் கார் ஒன்று பாதி வெள்ள நீரில் அப்படியே நின்றுள்ளது. அனேகமாக இந்த காரில் ஹைட்ரோலாக் ஆகி இருக்கும் என தெரிகிறது. அடுத்ததாக இந்த வீடியோவில் பென்ஸ் கார் நடுவில் ஸ்டிரக் ஆகி நின்ற அதே பகுதியில் இருவர் ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வந்து கொண்டிருக்கிறார்.

இந்த வீடியோவை பார்க்கும் போது பலரும் இந்த ஓலா ஸ்கூட்டரும் நடுவில் வந்து ஸ்டிரக் ஆகி நிற்கப் போகிறது என நினைத்தனர். ஆனால், ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டி வந்தவர் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் தண்ணீர் நிறைந்து இந்த சாலையை சுலபமாக கடந்து வந்தார். பெரும்பாலும் இன்டர்னல் கம்பஷன் இன்ஜின் கொண்ட வாகனங்கள் தண்ணீர் நிறைந்த பகுதியில் செல்வது சற்று ஆபத்தான விஷயமாக இருக்கும். எக்ஸாஸ்ட் பைப், ஏர் இன் டேக் பகுதி ஆகிய இடங்களில் வழியாக தண்ணீர் இன்ஜினிற்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது. ஆனால் ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஐபி 67 சான்று பெற்ற பேட்டரியை கொண்டதாகும்.

அதனால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நீரில் மூழ்கினாலும் பேட்டரி இருக்கும் பகுதிக்கு தண்ணீர் செல்லாது. இதனால் தண்ணீருக்குள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் செல்லும் போதும் தாராளமாக செயல்படும் அளவிற்கு திறன் கொண்டதாக இருக்கிறது. ஜெர்மன் கார்களான மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி, பிஎம்டபிள்யூ ஆகிய கார்களில் ஒரு பிரச்சனை இருக்கிறது. இந்த கார்களில் உள்ள ஏர் இன்டேக் பகுதி சாலைக்கு மிக அருகில் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையில் தண்ணீர் தேங்கியிருந்தால் அந்த தண்ணீர் ஏர் இன்டேக் பகுதி வழியாக இன்ஜினிற்கு சென்று ஹைட்ரோலாக் ஆக அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பொறுத்தவரை எக்ஸாஸ்ட் பைப் என்ற ஒரு உதிரிபாகமே கிடையாது. இதனால் ஸ்கூட்டருக்கு தண்ணீர் உள்ளே புகுந்து செல்லும் வாய்ப்பு மிகவும் குறைவுதான். இது மட்டுமல்ல ஓலா எஸ் 1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வடிவமைப்பும் தண்ணீருக்குள் எந்த சிரமமும் இல்லாமல் ஸ்கூட்டர் பயணிக்கும் படியாக இருக்கிறது. இன்டர்னல் கம்பஷன் இன்ஜினை பொருத்தவரை இப்படியாக மழை வெள்ள நீரில் பாதிக்கப்பட்டால் அதை ரிப்பேர் செய்வதற்கான செலவு அதிகமாக இருக்கும்.

ஆனால், எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இப்படியான பாதிப்புகள் எதுவும் ஏற்பட வாய்ப்பு குறைவுதான். அதே நேரம் ஹெவி கமர்சியல் வாகனங்களான பஸ் ட்ரக் ஆகியவை இப்படியாக மழை நீரில் செல்லும் போது பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு தான். இதற்கு முக்கியமான காரணம் இவையெல்லாம் அதிகமான கிரவுண்ட் கிளியரன்ஸில் இருப்பவை அதனால் அவ்வளவு உயரத்திற்கு மழை நீர் தேங்குவது என்பது அவ்வளவு எளிதில் நடக்காத விஷயம். அதே நேரத்தில் எலெக்ட்ரிக் கார் மற்றும் எஸ்யூவி கார்களில் இப்படியாக தண்ணீர் தேங்கிய பகுதிகள் செல்வது மற்ற சில ஆபத்துகளை விளைவிக்கும். காரின் கதவு பகுதி வழியாக தண்ணீர் காருக்குள் ஏற வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இப்படி காருக்குள் தண்ணீர் ஏறினால் இது மற்ற பாகங்களை பாதிக்கும்.

https://youtu.be/wQmInHK5ji0
Subscribe to my YouTube Channel

CHELLA

Next Post

Car Engine..!! காரின் இன்ஜின் எல்லாம் முன்னாடி இருக்க இதுதான் காரணமா..? இவ்வளவு நாள் தெரியாம போச்சே..!!

Sun Jun 25 , 2023
பெரும்பாலான கார்களின் இன்ஜின் முன் பக்கம் தான் இருக்கிறது. காரின் மையப்பகுதியிலோ பின் பகுதியிலோ பொருத்தப்படுவதில்லை. இது ஏன் என்று தெரியுமா..? இதற்குப் பின்னால் உள்ள ரகசியம் என்ன? இது குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம். இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் இயங்கி வரும் பெரும்பாலான கார்களின் இன்ஜின் (Car Engine) முன் பகுதியில் தான் இருக்கிறது. வெகு சில கார்களின் மட்டுமே மையப் பகுதியிலோ அல்லது காரின் […]
Car Engine..!! காரின் இன்ஜின் எல்லாம் முன்னாடி இருக்க இதுதான் காரணமா..? இவ்வளவு நாள் தெரியாம போச்சே..!!

You May Like