‘கேடி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தமன்னா. இதனைத் தொடர்ந்து சூர்யா, விஜய், அஜித், ஜெயம்ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜெயிலர் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இந்நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள லூலூ மாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை தமன்னா, வெள்ளை நிற உடையில் வந்து கேரள ரசிகர்களை கிறங்கடித்தார். அனைவருக்கும் கை அசைத்து ரசிகர்களின் பல கேள்விகளுக்கும் பதிலளித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
இதையடுத்து நிகழ்ச்சி முடிந்ததும், அங்கிருந்த ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு செல்ஃபி எடுக்க முயன்றனர். அப்போது, ரசிகர்களுடன் சிரித்த முகத்துடன் செல்ஃபி எடுத்து வந்தார். ஆனால், அப்போது கூடி இருந்த ரசிகர்கள் கூட்டத்தை பயன்படுத்தி தமன்னாவை தொடக்கூடாத இடத்தில் தொட்டதாக தெரிகிறது. இதனால் டென்ஷனான தமன்னா, தொடாமல் இருங்கள் என்று அவர்களிடம் சத்தம் போட்டுள்ளார். கூட்டம் அதிகமாக இருந்ததால் தமன்னாவிடம் அத்துமீறி நடந்து கொண்டது யார் என்று தெரியவில்லை.