fbpx

பிரபாஸுக்கு வில்லனாகும் கமல்..!! சம்பளம் எத்தனை கோடி தெரியுமா..? இதுதான் அதிகபட்ச சம்பளமாம்..!!

இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிக்க கமிட்டாகியிருக்கும் திரைப்படம் தான்  புராஜெக்ட் கே. இந்த திரைப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக நடிக்க தீபிகா படுகோன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுதவிர பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். புராஜெக்ட் கே படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் நடிகர் கமல்ஹாசன் பிரபாஸுக்கு வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கமல்ஹாசனின் வருகையால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் மிகவும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இப்படத்திற்கு கமல் வாங்கிய சம்பள விவரமும் வெளியாகி உள்ளது. அதன்படி, புராஜெக்ட் கே திரைப்படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக நடிக்க நடிகர் கமல்ஹாசன் ரூ.150 கோடி சம்பளமாக வாங்கி உள்ளாராம். அவரது கெரியரிலேயே அவர் வாங்கும் அதிகபட்ச சம்பளம் இதுதான் என கூறப்படுகிறது. தற்போது இந்தியன் 2 படத்தில் பிஸியாக நடித்து வரும் கமல்ஹாசன், அப்பட ஷூட்டிங் முடிந்ததும் புராஜெக்ட் கே படப்பிடிப்பில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை வருகிற 2024ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு கொண்டுவர உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

தொடங்கியது பருவமழை…..! தேங்கிக் கிடந்த மழை நீரை கடக்க முயற்சி செய்தபோது தூக்கி வீசப்பட்ட ஆசிரியர் இறுதியில் நடந்த சோகம்….!

Mon Jun 26 , 2023
தலைநகர் டெல்லியில் இன்று பருவமழை ஆரம்பமாகும் என்று முன்பே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று பலத்த மழை பெய்தது இத்தகைய நிலையில், 35 வயது மதிக்கத்தக்க ஆசிரியை சாக்‌ஷி என்பவர் தன்னுடைய உறவினர் வீட்டு விழாவில் பங்கேற்பதற்காக குடும்பத்தோடு டெல்லி ரயில் நிலையத்திற்கு வந்ததாக தெரிகிறது. அந்தப் பகுதியில் தேங்கி நின்ற மழை நீரை கடந்து செல்ல முயற்சி செய்தபோது அருகில் இருந்த மின்கம்பத்தை அவர் பிடித்ததாக தெரிகிறது இதனால் அதிலிருந்து […]
தகன மேடையில் எரிந்த பெண்ணின் சடலம்..!! இறைச்சியை பங்கு போட்டு சாப்பிட்ட அதிர்ச்சி சம்பவம்..!!

You May Like