பிரபல யூடியூபர் தேவ்ராஜ் படேல் வீடியோ எடுக்க பைக்கில் சென்ற போது லாரி மோதி அவர் உயிரிழந்துள்ளார்.
22 வயதான யூடியூபர், தேவ்ராஜ் படேல், நகைச்சுவை வீடியோக்களுக்காகவும், பிரபல யூடியூபராக இருந்து நடிகராகவும் மாறிய புவன் பாமுடன் ஒத்துழைப்பதற்காக அறியப்பட்டவர், ராய்ப்பூர் நகரில் நடந்த பைக் விபத்தில் உயிரிழந்தார்.
பிரபல யூடியூபர் தேவ்ராஜ் படேல் வீடியோ எடுக்க பைக்கில் சென்ற போது லாரி மோதி அவர் உயிரிழந்துள்ளார்.’Dil se bura lagta hai’ என்ற வீடியோ மூலம் அவர் பிரபலமான இவர், லாரி மோதியதில் அவரது தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்ற சூழலில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். விபத்தில் உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் உண்டாக்கி உள்ளது.