தமிழ் சினிமாவில் 90-களில் நகைச்சுவை கலந்த குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை ஷர்மிலி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். 90’ஸ் குழந்தைகளுக்கு இவரை நன்றாகவே தெரிந்திருக்கும். நடிகையாவதற்கு முன்னர் இவர் க்ரூப் டான்ஸராகவும் இருந்தார். அதுமட்டுமின்றி, ‘ராக்காயி கோயிலிலே’ படத்தில் வரும் இவரின் லாட்டரி சீட்டு காமெடியை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அப்படத்தில் இவர் கவுண்டமணிக்கு ஜோடியாக நடித்திருப்பார். பின்னர் அவருடன் இணைந்து 27 படங்களில் நடித்தார்.
இவரை கேட்டுக்கொண்டு தான் அவர் மற்ற படங்களுக்கு கூட டேட் கொடுக்க வேண்டிய சூழ்நிலை இருந்ததாகவும், இவரே தானாக டேட் கொடுத்து விட்டால், அந்த தேதியில் எனக்கு ஷர்மிலி டேட் கொடுத்துள்ளார் என கூறி ரஜினிகாந்த் முதல் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க விடாமல் கெடுத்து விடுவாராம். இதனால் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் டான்ஸ் ஆடும் வாய்ப்பையும் இழந்துள்ளார். ஒரு நிலையில் ஷர்மிலி, நடிகர் கவுண்டமணியுடன் மட்டுமே நடிப்பார் என கிசுகிசு எழுந்துள்ளது. ஆரம்பத்தில் ஷர்மிலி கவுண்டமணியுடன் நடிக்க தயங்கிய நிலையில், பின்னர் ரசிகர்கள் மத்தியில் இவர்கள் இணைந்து நடித்த காட்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் காரணமாக கவுண்டமணி தன்னுடைய பல படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் அவருக்கு வழங்கியுள்ளார்.
தன்னையும் – கவுண்டமணியையும் பற்றி தேவையில்லாத கிசுகிசுக்கள் எழுந்த போது, இனி கவுண்டமணியுடன் எந்த படத்திலும் நடிக்க மாட்டேன் என ஷர்மிலி கூறியுள்ளார். இந்த ஒற்றை வார்த்தையை அவர் கூறிய பின்னர், தன்னுடைய படங்களில் அவர் நடிக்க புக் ஆகி இருந்த படங்களில் இருந்து தூக்கியது மட்டும் இன்றி, மற்ற படங்களின் வாய்ப்புகளும் கிடைக்காத அளவுக்கு செய்து விட்டாராம். இதனால் தன்னுடைய திரையுலக வாழ்க்கையே நாசமானது என கூறியுள்ளார் ஷர்மிலி.
மேலும், திருமணத்தைப் பற்றி யோசிக்காமல் இருந்த அவருக்கு 40 வயதுக்கு மேல் தான், திருமணம் செய்து கொள்ள வேண்டும், தனக்கு என ஒரு ஆண் துணை வேண்டும் என்கிற எண்ணமே வந்ததாகவும், இதனால் 40 வயதுக்கு மேல் தான் திருமணம் செய்து கொண்டு தற்போது தன்னுடைய கணவருடன் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார். ஷர்மிலி தற்போது நான்கு மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், வனிதா விஜயகுமாரின் பேட்டியின் போது கூறியுள்ளார். இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து பலரும் இவருக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.