சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு இன்று பக்ரீத் சிறப்பு ரயில் இயக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இன்று இரவு 11:15 மணியளவில் புறப்படும் கரிப்ரத் சிறப்பு ரயில் சென்னை எழும்பூருக்கு நள்ளிரவு 12 10 மணியளவில் தாம்பரத்திற்கு நள்ளிரவு 12 43 மணி அளவில் திருநெல்வேலிக்கு நாளை காலை 11 45 மணி அளவில் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோலவே இந்த ரயில் மறு மார்க்கமாக திருநெல்வேலியில் இருந்து நாளை பிற்பகல் 3 மணி அளவில் கிளம்பும் இந்த ரயில் மறுநாள் அதிகாலை 3 45 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தடையும். இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் சாத்தூர் மற்றும் கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகள் வழியாக இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.