விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோக்களில் ஒன்று தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது 4-வது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில், அது இறுதிக்கட்டத்தையும் எட்டியுள்ளது. இந்நிலையில், தற்போது ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருக்கின்றது. அந்தவகையில், குக் வித் நிகழ்ச்சிக்கு இந்த வாரம் பிக்பாஸ் பிரபலங்கள் வருகை தந்துள்ளனர். அதில் பிக்பாஸ் பிரபலங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோமாளி கொடுக்கப்படுகிறது.
அந்தவகையில், பரத் தனக்கு ஜனனி தான் வரவேண்டும் எனக்கேட்டு கை எடுத்துக் கூறுகின்றார். சொன்னது போலவே பிக்பாஸ் பிரபலம் ஜனனி தான் பரத்திற்கு வருகின்றார். இதனையடுத்து பரத் ஓடிச் சென்று ஜனனியின் கழுத்தில் மாலை போடுகின்றார்.