உத்தரப்பிரதேச மாநிலம் ஜகாங்கிராபாத் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமம் ஒன்றில், 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஜோடிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமண வாழ்க்கை இருவருக்கும் நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில், அந்தப் பெண்ணுக்கு தனது மாமியார் வீட்டின் பக்கத்தில் வசிக்கும் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னாளில் இந்த நட்பு கள்ளக்காதலாக மாறிய நிலையில், இருவரும் ஊரை விட்டு வெளியேறி உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர். சில வாரங்களுக்கு முன்பாக கள்ளக்காதல் ஜோடிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, ஒரு வாரத்திற்கு முன்பாக மீண்டும் தன் கணவரின் வீட்டிற்கு வந்த அந்தப் பெண், கணவரிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் அவருடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தார். இருப்பினும், தனக்கு துரோகம் செய்ததாக கருதி ஆண் நண்பர் மீதான கோபம் அந்த பெண்ணுக்கு குறையவில்லை. இந்நிலையில், கடந்த திங்களன்று பிரிந்து சென்ற கள்ளக்காதலன் பெண்ணின் வீட்டிற்கு ரகசியமாக வந்து, உறவு கொள்ளுமாறு வற்புறுத்தத் தொடங்கியுள்ளான். அவர் மீது ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த காதலி, கூர்மையான ஆயுதத்தால் கள்ளக்காதலனின் அந்தரங்க உறுப்பை வெட்டியுள்ளார்.
இதனால் அலறித் துடித்த அந்த நபரை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஜஹாங்கிராபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், கள்ளக்காதலனின் அந்தரங்க உறுப்பை துண்டித்து தப்பியோடிய பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர்.