அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு தொலைதூரக் கல்வி வழங்கி வருகின்றது. தற்சமயம் அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது.
அதாவது தொலைதூரக் கல்விக்கான தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு இருக்கிறது. முதலாம் சமஸ்டர் முதல் 4ம் செமஸ்டர் வரையும் நடைபெறும் தேதி தொடர்பான முழுமையான விவரங்கள் இந்த அட்டவணையில் இடம் பெற்றிருக்கிறது.
அதன் அடிப்படையில், எம்.பி.ஏ, எம்.சி.ஏ மற்றும் எம் எஸ் சி பாடப்பிரிவுகளுக்கான தேர்வு ஜூலை மாதம் 16ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. செமஸ்டர் தேர்வு காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வு அட்டவணையை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.