நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய உடல் எடையை குறைத்த ரகசியத்தை பகிரங்கமாக போட்டு உடைத்து இருக்கிறார்.
கீர்த்தி சுரேஷ் போலவே பாகுபலி படத்தில் தேவசேனாவாக நடித்த இளசுகளின் மனதைக் கவர்ந்த அனுஷ்காவும் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக இருந்தவர் தான். அவர், ஆர்யாவுடன் இணைந்து நடித்த இஞ்சி இடுப்பழகி என்ற படத்தில் வித்தியாசமாக தன்னை காட்ட வேண்டும் என உடல் எடையை பல மடங்கு ஏற்றி புது முயற்சியை மேற்கொண்டார். அந்தப் படத்திற்குப் பிறகு அனுஷ்காவிற்கு சுத்தமாகவே மார்க்கெட் இல்லாமல் போனது. அதுமட்டுமின்றி, அவரது உடல் எடையை மீண்டும் பழையபடி கொண்டு வருவதற்கு படாத பாடுபட்டார். இதே போலவே கீர்த்தி சுரேஷ் தேசிய விருதை தட்டி தூக்கிய மகாநதி படத்தில் தன்னுடைய உடல் எடையை ஏற்றினார். அந்தப் படத்திற்கு பிறகு தான் அவருக்கு உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டது.
அதுவரை எந்த உடற்பயிற்சியும் மேற்கொள்ளாத கீர்த்தி சுரேஷ், ‘மகாநதி’ படத்திற்குப் பிறகு தன்னுடைய உடல் எடையை குறைத்தே ஆக வேண்டும் என இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டார். ஆனால், இவர் அனுஷ்கா போலவே தனது கேரியரை தொலைத்து விடாமல் சுதாரித்துக் கொண்டு மளமளவென ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு உடல் எடையை குறைத்தார். இவர் ஆப்ரேஷன் செய்துதான் ஸ்லிம்னதாக பலரும் கீர்த்தி சுரேஷிடம் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். ஆனால், உண்மையில் ஒன்பது மாத கடின உடற்பயிற்சியின் மூலமாகத்தான் உடல் எடையை குறைத்ததாக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு ஒரு கட்டத்தில் கீர்த்தி சுரேஷ் எக்ஸர்சைஸ் செய்வதை நிறுத்திவிட்டு யோகா செய்து மீண்டும் தன்னுடைய எடையை கொஞ்சம் ஏற்றினாராம். இப்படி தான் மகாநதி படத்திற்குப் பிறகு மீண்டும் பழைய தோற்றத்திற்கு வந்ததாக கீர்த்தி சுரேஷ் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.