ஸ்ருதிஹாசனிடம் குழந்தையாகவே மாறிய கமல்ஹாசன்..!! இணையத்தை கலக்கும் கியூட் ரீல்ஸ் வீடியோ..!!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்தாண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் தான் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் கமல் உடன் சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி சாதனைகளை படைத்ததோடு ரூ. 450 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவித்தது. மேலும், கமல்ஹாசனுக்கு கம்பேக் படமாகவும் இது அமைந்தது.


நடிகர் கமல்ஹாசன் இதற்கு முன்னர் கடந்த 1986ஆம் ஆண்டும் விக்ரம் என்கிற படத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் இளையராஜா இசையில் கமல்ஹாசனின் குரலில் விக்ரம்… விக்ரம் என ஒலிக்கும் தீம் மியூசிக் மிகவும் பேமஸ் ஆனது. அந்த தீம் மியூசிக்கை ரீமிக்ஸ் செய்து லோகேஷ் இயக்கிய இந்த விக்ரம் படத்திலும் பயன்படுத்தி இருந்தார் அனிருத். அந்த ரீமிக்ஸ் செய்யப்பட்ட தீம் மியூசிக்கிற்கும் மாபெரும் வரவேற்பு கிடைத்தது.

வீடியோவை காண: https://www.instagram.com/reel/CuFEQKOhSEi/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். அந்த ரீல்ஸ் வீடியோவில் ஸ்ருதிஹாசன், இளையராஜா இசையமைப்பில் உருவான விக்ரம் பட தீம் மியூசிக்கை பின்னணியில் ஒலிக்கவிட்டு அதனை ரசித்து கேட்டுக் கொண்டிருக்கிறார். இறுதியாக கமல்ஹாசன் எண்ட்ரி கொடுத்து விக்ரம் என கத்துகிறார். இந்த கியூட் வீடியோ பார்த்த ரசிகர்கள் கமல் குழந்தையாகவே மாறிவிட்டார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

CHELLA

Next Post

தமிழக காவல்துறையின் 31 வது தலைமை இயக்குனராக…..! பொறுப்பேற்றார் சங்கர் ஜிவால்….!

Fri Jun 30 , 2023
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் நியமனம் செய்யப்பட்டவர் சைலேந்திரபாபு. அவர் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். ஆகவே அந்த இடத்திற்கு சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவால் தலைமைச் செயலாளராக இருக்கின்ற இறையன்புவால் நியமனம் செய்யப்பட்டார். அதன்படி சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவால் தமிழக காவல்துறையின் புதிய தலைமை இயக்குனராக தற்போது பொறுப்பேற்றுள்ளார். […]
sangar jiwal

You May Like