fbpx

கொட்ட போகுது கனமழை..!! எந்த மாவட்டங்களில் தெரியுமா..!! வானிலை மையம் கொடுத்த வார்னிங்..!!

தமிழ்நாட்டில் வரும் நாட்களில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்க்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய வெயில், இம்மாத தொடக்கம் வரையிலும் கூட நீட்டித்தது. இந்த மாதம் முதல் இரண்டு நாட்களில் பல முறை வெப்பம் 100 டிகிரியை தாண்டியிருந்தது. அதன் பின்னர் சட்டென மாறிய வானிலையால் பல இடங்களில் நல்ல மழை பெய்தது. குறிப்பாகத் தலைநகர் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் கணிசமான அளவுக்கு மழை பெய்யவே செய்தது. வெப்பம் இப்போது குறைந்துள்ள நிலையில், மாநிலத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.

தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (ஜூன் 30) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நாளை (ஜூலை 1) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல நாளை மறுநாள், ஜூலை 2ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி, கோவை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 3ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜூலை 4ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

பள்ளியில் கொடுமை,மிட்டாய் விற்ற எலான் மஸ்க்..

Fri Jun 30 , 2023
மார்டன் உலகில் டெக்னாலஜியை புரட்டிப் போட்டவர்களில் முக்கியமானவர் ஸ்டீவ் ஜாப்ஸ், கம்ப்யூட்டர் பெரிய நிறுவனங்களுக்கான என்ற கூறப்பட்ட காலத்தில் மக்கள் தங்களுடைய வீடுகளில் எளிய முறையில் GUI மூலம் பயன்படுத்த முடியும் என அறிவித்து மக்கின்டாஷ் கம்ப்யூட்டரை அறிமுகம் செய்தார், அதன் பின்பு ஸ்மார்ட்போன், ஐபாட், பிக்சார் திரைப்படம் என ஒவ்வொரு தயாரிப்புகளும் அதன் வரலாற்றை மறக்க செய்தது.   கிட்டத்தட்ட ஸ்டீவ் ஜாப்ஸ்-க்கு இணையாக இன்று பேசப்படுபவர் எலான் […]

You May Like