fbpx

பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர், 150 ஆண்டுகளுக்கு பிறகு கொடியேற்றம்

விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் 150 ஆண்டுகளுக்கு பிறகு பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு அருகே உள்ள பூவரசன்குப்பம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோயில் அமைந்துள்ளது. கல் தூணில் நரசிம்மர் தோன்றி காட்சியளித்த இடத்தில் கிபி.7ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னரால் கட்டப்பட்ட சிறப்புடைய, தென் அஹோபிலம் என்று அழைக்கப்படும் பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் 150 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு பிரம்மோற்சவ திருவிழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் பிரம்மோற்சவ திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனையொட்டி லட்சுமி நரசிம்மருக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் மேள, தாளம் மற்றும் மந்திரங்கள் முழுங்க பிரம்மோற்சவ திருவிழாவிற்கான கொடியேற்றப்பட்டது. பின்னர் லட்சுமி நரசிம்மர் சுவாமி வீதியுலா நடைபெற்றது. 150 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள இந்த பிரம்மோற்சவ திருவிழா இன்று தொடங்கி வரும் 9ஆம் தேதி வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம் வரும் 6ஆம் தேதியும், 7ஆம் தேதி திருமஞ்சனமும், 8ஆம் தேதி லட்சுமி நரசிம்மர் கோயில் தேரோட்டமும் வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.

Maha

Next Post

பிறந்து இரண்டே நாளில் கோடிக்கணக்கான சொத்துகளுக்கு அதிபதி..!! ரூ.52 கோடி, சொகுசு பங்களா பரிசு..!!

Fri Jun 30 , 2023
‘பார்ன் வித் சில்வர் ஸ்பூன்’, பிறக்கும்போது வாயில் வெள்ளிக் கரண்டியுடன் பிறந்த குழந்தை என்ற வாசகம் ஆங்கிலத்தில் உண்டு. இந்த வாசகத்தை மெய்பிக்கும் விதமாக பிரிட்டனில் பிறந்து 2ஆம் நாளே ஒரு குழந்தை பல கோடிகளுக்கு அதிபதியாகியுள்ளது. இந்த குழந்தை குறித்த செய்திகளும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மிகப்பெரிய கோடீஸ்வரரான பாரி ட்ரூவிட் பார்லோவின் மகள் சாஃப்ரான் டிரைவ்ட் பார்லோ. 23 வயதான சாஃப்ரானுக்கும் கார்னர் என்பவருக்கும் திருமணம் […]
பிறந்து இரண்டே நாளில் கோடிக்கணக்கான சொத்துகளுக்கு அதிபதி..!! ரூ.52 கோடி, சொகுசு பங்களா பரிசு..!!

You May Like