சில வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்று தடகளப் போட்டியில் தங்கம் என்று ஒட்டுமொத்த இந்தியரையும் பெருமைப்படுத்தினார் நீரஜ் சோப்ரா.
அப்போது அவரை ஒட்டுமொத்த இந்தியாவும் தலையில் தூக்கி வைக்காத குறையாக கொண்டாடியது அதேபோல தற்போது டைமண்ட் லீப் தடகள போட்டி ஒன்று சுவிட்சர்லாந்தில் லாசாணி நகரில் நேற்று நடந்தது இந்த போட்டியில் ஈட்டி எறிதல் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தவரான இந்திய வீரர் நீரஜ் சோப்ரா களமிறங்கினார். காயத்தால் ஒரு மாதம் தொடர் ஓய்வில் இருந்த அவர் டைமண்ட் லீக்கில் தாக்கத்தை உண்டாக்குவாரா? என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியில் இருந்தது.
இந்த நிலையில் தான் ஸ்விட்சர்லாந்தில் நடந்த டைமண்ட் லீக் தொடரில் இரண்டாவது முறையாக அவர் தங்கம் வென்றுள்ளார் 87.66 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து வெற்றி அடைந்துள்ளார். ஜெர்மனியின் ஜூலியன் வெப்பர் 2வது இடமும், செக் குடியரசின் ஜாகுப் வாட்லெஜ் 3வது இடமும் பிடித்தனர்.
இதன் மூலமாக டைமண்ட் லைக் தடகளப் போட்டியில் 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நீரஜ் சோப்ரா சாதனை படைத்துள்ளார். கடந்த வருடம் இதே தொடரில் 88.44 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜாகுப் வாட்லெஜ், உலகச் சாம்பியனான ஆண்டர்சன் பீட்டர்ஸ், முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் கேஷோர்ன் வால்காட், ஜூலியன் வெப்பர் உள்ளிட்ட முன்னணி வீரர்களும் இந்த போட்டியில் பங்கேற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.