fbpx

தள்ளிப்போகும் சூர்யாவின் ‘கங்குவா’..!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவின் 42-வது படமாக உருவாகி வருகிறது ‘கங்குவா’. இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். யுவி கிரியேஷன்ஸ், ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் இணைந்து தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசைமையக்கிறார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்கிறார். மதன் கார்க்கி வசனங்களை எழுதுகிறார். நிசாத் யூசூப் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ‘கங்குவா’ படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

3டி தொழில்நுட்பத்தில் படத்தை 10 மொழிகளில் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. கோவா, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23 ஆம் தேதி அன்று இப்படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகளுடன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம் என்று தகவல் வெளியானது. அதன்படி, பொங்கலுக்கு இந்தப் படம் வெளியாகலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், சிஜி உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு அதிகமான நாட்கள் தேவைப்படுவதால் வரும் தமிழ் புத்தாண்டுக்கு அதாவது ஏப்ரல் மாதம் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

Maha

Next Post

வெகு விமர்சையாக நடைப்பெற்ற மாங்கனி திருவிழா!

Sun Jul 2 , 2023
மாங்கனி திருவிழாவானது காரைக்காலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாரின் வரலாற்றை கூறும் விதமாக இம்மாங்கனி திருவிழாவானது கொண்டாடப்படுகிறது. இவ்வூரில், காரைக்கால் அம்மையாருக்கென்று ஒரு தனிக்கோவிலானது பாரதியார் சாலையில் அமைந்திருக்கிறது. இங்கு ஆண்டுதோறும் மாங்கனி திருவிழாவானது வெகு விமர்சையாக நடைபெருகிறது. இதில் காரைக்கால் அம்மையார் என்று அழைக்கப்படும் புனிதவதிக்கும், பரமதத்தனுக்கும் திருமண வைபவம் நடைபெறும். இந்நிகழ்ச்சியின் போது, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இதில் பங்குக்கொண்டு மாங்கனிகளை அம்மையாருக்கு […]

You May Like