நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து, நடிகர் தனுஷ் இயக்குநர் சேகர் கம்முலா படத்திலும், இந்தியில் இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தனுஷின் 50-வது படத்தை அவரே இயக்கி நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘D 50’ படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளை பற்றி அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரை வெளிவரவில்லை. ஆனால், இதில் விஷ்ணு விஷால், எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இந்நிலையில், தனுஷ் இன்றைய தினம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மொட்டையடித்து இரு மகன்களுடன் மனமுருகி தரிசித்திருக்கின்றார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.