சினிமாவுக்குள் நுழைந்த சில காலங்களிலேயே பிரபலமான நடிகைகளில் ஒருவராக மாறினார் அனுஷ்கா. தெலுங்கு திரையுலகில் அறிமுகமான இவர், அதில் சில படங்கள் நடித்த பிறகு தமிழில் இரண்டு என்கிற திரைப்படம் மூலமாக அறிமுகமானார். அதற்கு பிறகு அருந்ததி திரைப்படம் அவருக்கு முக்கியமான திருப்பு முனையாக இருந்தது. அதன் பிறகு தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் அதிக பட வாய்ப்புகளை பெற்றார். பிறகு அவரது உடல் எடை அதிகரித்ததன் காரணமாக பட வாய்ப்புகளை இழக்க துவங்கினார்.
அவர் நடித்த திரைப்படங்கள் அதிகமாக தோல்வியை கண்டது. தற்சமயம் அனுஷ்கா சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். சினிமாவிற்கு வரும்பொழுதே அனுஷ்காவுக்கு 24 லிருந்து 25 வயதிற்குள் ஆகி இருந்தது. சினிமாவிற்கு வருவதற்கு முன்னால் அனுஷ்கா பள்ளிகளில் யோகா ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். பல பள்ளிகளில் யோகா சொல்லிக் கொடுத்து வந்த அனுஷ்காவிற்கு சினிமாவின் மீது ஆர்வம் இருந்தது. ஆனால், நேரடியாக சினிமாவிற்கு செல்ல முடியாது என்பதை அறிந்து ஒரு திட்டம் போட்டார்.
இதற்காக நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை சந்தித்த அனுஷ்கா, யோகாவின் நன்மைகள் குறித்து அவரிடம் கூறி அவருக்கு யோகா ஆசிரியராக சேர்ந்தார். இதன் மூலம் சினிமா பிரபலங்களிடம் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார் அனுஷ்கா. அதன் வழியாகதான் முதன் முதலாக சினிமாவிற்கு அறிமுகமாகினார் என்று நடிகரும், சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் தனது பேட்டியில் கூறியுள்ளார்.