fbpx

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம்!… இந்திய டி-20 அணி அறிவிப்பு!… இளம் வீரர்களுக்கு வாய்ப்பு!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடும் இந்திய டி-20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி வரும் ஜூலை 12 முதல் வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பல இளம் வீரர்கள் முதன்முறையாக அணிக்குள் இடம்பெற்றிருந்தனர். இதேபோல் தற்போது டி-20யில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாடும் இந்திய அணிக்கு, ஐபிஎல் தொடரில் கலக்கிய இளம் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்திய டி-20 அணி: இஷான் கிஷன் (WK), சுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, சூர்ய குமார் யாதவ் (VC), சஞ்சு சாம்சன் (WK), ஹர்திக் பாண்டியா (C), அக்சர் படேல், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், அவேஷ் கான், முகேஷ் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Kokila

Next Post

முன்னாள்‌ படைவீரர்களுக்கு வரும் 14-ம் தேதி சிறப்பு குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌...! ஆட்சியர் அறிவிப்பு...

Thu Jul 6 , 2023
சேலம்‌ மாவட்டத்தைச்‌ சேர்ந்த முன்னாள்‌ படைவீரர்கள்‌ மற்றும்‌ படையில்‌ பணிபுரிவோரின்‌ சார்ந்தோர்களுக்காகவும்‌ சிறப்பு குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ 14.07.2023 அன்று நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தனது செய்தி குறிப்பில்:சேலம்‌ மாவட்டத்தைச்‌ சேர்ந்த முன்னாள்‌ படைவீரர்கள்‌ மற்றும்‌ படையில்‌ பணிபுரிவோரின்‌ சார்ந்தோர்களுக்காகவும்‌ சிறப்பு குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ 14.07.2023 அன்று பகல்‌ 10.30 மணிக்கும்‌, அதனை தொடர்ந்து முன்னாள்‌ படைவீரர்களுக்கான தொழில்‌ முனைவோர்‌ கருத்தரங்குமாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலகத்தில்‌ உள்ள மக்கள்‌ […]

You May Like