மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணிகள் தேர்வின் (II), 2022 முடிவுகளின் அடிப்படையில் 302 பேர் இறுதியாக தகுதி பெற்றுள்ளனர்.
விண்ணப்பதாரர்கள் http://www.upsc.gov.in என்ற UPSC இணையதளத்தை அணுகுவதன் மூலமும் முடிவுகள் தொடர்பான தகவல்களைப் பெறலாம். இருப்பினும், தேர்வர்களின் மதிப்பெண்கள் 30 நாட்களுக்கு இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குள் ஆணையத்தின் இணையதளத்தில் கிடைக்கும்.
மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் வளாகத்தில் ஒரு கவுன்ட்டர் உள்ளது. தேர்வர்கள் 011-23385271, 011-23381125 மற்றும் 011-23098543 ஆகிய எண்களைத் தொடர்புகொள்வதன் மூலம் நேரிலோ அல்லது தொலைபேசியிலோ வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தங்கள் தேர்வு தொடர்பாக தகவல் அல்லது விளக்கங்களைப் பெறலாம்.