fbpx

கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம்..!! யாருக்கெல்லாம் கிடைக்கும்..? அரசாணை வெளியீடு..!!

புதுச்சேரியில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாதம் ரூ.300 மற்றும் ரூ.150 மானியம் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ஒரு வீட்டு உபயோக சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்கப்படும் என சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார். அதன்படி, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஒரு சிலிண்டருக்கு 300 ரூபாயும், வறுமை கோட்டிற்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ.150 ரூபாயும் வழங்க துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்தார்.

இதனைத்தொடர்ந்து அதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணை அரசிதழில் வெளியிடப்பட்டவுடன் உடனடியாக அமலுக்கு வரும் எனவும், இந்த மானியத்தொகை அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் எனவும் புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

Chella

Next Post

தமிழ்நாட்டில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை..!! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா..? வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

Mon Jul 10 , 2023
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு […]

You May Like